புட்டின் புற்றுநோய் சிகிச்சை செய்துகொள்ள இருக்கிறார் என்று அமெரிக்க ஊடகம் செய்தி

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின், நாட்டின் முக்கிய அதிகாரி ஒருவரிடம் தற்காலிகமாக அதிகாரத்தை வழங்கிவிட்டு புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்துகொள்ளப் போவதாக அமெரிக்க ஊடகம் வெளியிட்ட உறுதி செய்யாதத் தகவல் கூறியது.

திரு புட்டின் அறுவை சிகிச்சை கட்டாயம் செய்துகொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியதாக அந்த செய்தி கூறியது.

அறுவை சிகிச்சைக்குப் பின்னர் அவர் குணமாக சிறிது காலம் அவர் வழக்கமான பணிகளில் ஈடுபட முடியாது என்றும் நியூ யார்க் போஸ்ட் கூறியது.

அதனால் ரஷ்யாவின் பாதுகாப்பு மன்றத் தலைவர் நிக்கோலாய் பட்ருஷெவ்விடம் அதிகாரத்தை ஒப்படைத்துவிட்டு திரு புட்டின் அறுவை சிகிச்சை செல்வார் என்று அது சொன்னது.

ரஷ்யாவின் வெளிநாட்டு உளவுத்துறையில் லெஃப்டனன்ட் ஜெனரலாகப் பணியாற்றிய ஒருவர் நடத்தும் டெலிகிராம் குழுவில் வெளியிட்ட தகவலை மேற்கோள் காட்டி நியூ யார்க் போஸ்ட் அந்த செய்தியை வெளியிட்டது.

அண்மை காலமாக திரு புட்டின் பார்ப்பதற்கு உடல் நலம் குன்றியது போல தோன்றுகிறார் என்றும் அவருக்கு புற்றுநோய், பார்க்கின்சன்ஸ் நோய் ஆகியவை உள்ளன என்றும் நாளேடு கூறியது.

ஆனால் அந்த செய்தியும் அதில் உள்ள தகவல்களும் உறுதிசெய்யப்படவில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!