புட்டினின் அணு ஆயுத எச்சரிக்கையை அலட்சியப்படுத்தி உக்ரேனுக்கு உதவியை அதிகரிக்கும் அமெரிக்க அதிபர்

உக்­ரே­னில் வெளி­யார் யாரா­வது தலை­யிட்­டால் மின்­னல் வேக அணு­ ஆ­யுதத் தாக்கு­தல் தொடங்­கும் என்று ரஷ்ய அதி­பர் விளா­டி­மிர் புட்­டின் எச்­ச­ரித்து இருக்­கி­றார்.

ஆனால் இதை ஒரு பொருட்­டாக அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைடன் கரு­த­வில்லை.

உக்­ரே­னுக்கு உலக நாடு­க­ளின் ஆத­ரவை­யும் அமெ­ரிக்க ஆத­ர­வை­யும் அதி­கப்­ப­டுத்த முயற்­சி­களை திரு பைடன் முடுக்­கி­விட்­டுள்ளார்.

உக்­ரே­னுக்கு மேலும் US$33 பில்­லி­யன் உதவி வழங்க அங்­கீ­க­ரிக்­கும்­படி அமெ­ரிக்க நாடா­ளு­மன்­றத்தை அதி­பர் பைடன் கேட்­டுக்­கொண்­டார். ரஷ்யா மீது உக்­ரேன் படை­யெ­டுத்து இருப்­பதை அடுத்து உக்­ரே­னுக்கு வழங்­கக்­கூ­டிய உத­வி­க­ளைப் பற்றி விவா­திப்­ப­தற்­காக சென்ற வாரம் ஜெர்­ம­னி­யில் உள்ள அமெ­ரிக்கத் தளத்தில் 40 நாடு­கள் அமெ­ரிக்கா தலை­மை­யில் கூடி விவா­தித்­தன.

அதை­ய­டுத்து புட்­டின் கடு­மை­யான எச்­ச­ரிக்­கை­யைப் பிறப்­பித்­தார். வெளி­யார் யாரா­வது உக்­ரேன் சார்­பில் நேர­டி­யாக தலை­யிட்­டால் மின்­னல் வேக அணு­ ஆயுதத் தாக்­கு­தல் இடம்­பெ­றும் என்று புட்டின் பிர­க­ட­னப்­ப­டுத்­தி­னார்.

"வேறு யாரி­ட­மும் இல்­லாத ஆயு­தங்­கள் எங்­க­ளி­டம் எல்­லாம் இருக்­கின்­றன. வெறும் ஜம்­பம் அடித்­துக்கொள்­ள­வில்லை. தேவை எனில் அவற்றைப் பயன்­ப­டுத்த தயங்­க­மாட்­டோம்," என்றார் திரு புட்­டின்.

ஆனால் ரஷ்ய மிரட்­டலை ஒதுக்கித் தள்­ளி­விட்டு உக்­ரே­னுக்கு ஆத­ரவை அமெ­ரிக்கா தீவி­ரப்­ப­டுத்தி வரு­கிறது.

உக்­ரே­னுக்கு அனுப்­பப்­படும் ஆயு­தங்­களை எப்­படிப் பயன்­ப­டுத்­து­வது என்­ப­தன் தொடர்­பில் உக்­ரே­னிய படை­யி­ன­ருக்குப் பயிற்சி அளிக்­கப்­ப­டு­வது பற்­றி­யும் அமெ­ரிக்க தற்­காப்பு அமைச்சு பகி­ரங்­க­மாக அண்­மை­யில் கருத்­து­ரைத்­தது.

உக்­ரேன் மீது போர் தொடுத்­துள்ள ரஷ்­யா­வின் ஆற்­றலைச் சிதைத்து நீண்ட நெடுங்­கா­லத்­திற்கு அதைப் பல­வீ­னப்­படுத்துவதே தன்­னு­டைய இலக்கு என்று இப்­போது வாஷிங்­டன் கூறு­கிறது.

உக்­ரேன் போரில் இந்­தியா நடு­நி­லைமை வகிக்­கிறது. ரஷ்­யா­வி­டம் இருந்து மலிவு விலை­யில் எண்­ணெய் வாங்­கு­கிறது.

என்­றா­லும்­கூட சிறிய அள­வி­லான இந்­திய நிறு­வ­னங்­கள் ரஷ்­யா­வு­டன் கூடிய தங்­க­ளது தொழில்­துறை உற­வு­களை நிறுத்தி இருப்­ப­தா­கக் கூறப்­படு­கிறது.

டாடா ஸ்டீல், இன்­ஃபோ­சிஸ் உள்ளிட்ட இத்­த­கைய நிறு­வ­னங்­கள் மேற்­கத்­திய சந்­தை­க­ளு­டன் கணி­ச­மான அள­வுக்குத் தொடர்­பு உ­டை­யவை என்பது குறிப்பிடத் தக்கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!