வட அமெரிக்காவில் காற்பந்து மீதான மோகத்தை அதிகரிக்கும் 2026 உலகக் கிண்ணப் போட்டி

நியூ­யார்க்: 2026 உல­கக் கிண்­ணக் காற்­பந்­துப் போட்டி, வட அமெ­ரிக்­கா­வில் காற்­பந்து மீதான மோகத்தை அதி­க­ரிக்­கும் என அனைத்துலக காற்பந்துச் சம்மேளனத்தின் (ஃபிஃபா) தலைவர் கியானி இன்ஃபண்­டினோ கூறி­யுள்­ளார். 2026 உல­கக் கிண்ணப் போட்டியை அமெ­ரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடு­கள் ஏற்று நடத்தும் என முன்­ன­தாக அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

இந்­நி­லை­யில், ஆட்­டங்­களை ஏற்று நடத்­தும் 16 நக­ரங்­க­ளின் பெயர்­களை ஃபிஃபா நேற்று முன்­தி­னம் வெளி­யிட்­டது.

அமெ­ரிக்­கா­வில் சியேட்­டல், சான் ஃபிரான்­சிஸ்கோ, லாஸ் ஏஞ்­சலிஸ், கான்­சஸ் சிட்டி, டல்­லாஸ், அட்­லாண்டா, ஹியூஸ்­டன், பாஸ்டன், ஃபிலடெல்­ஃபியா, மயாமி, நியூ­யார்க்/நியூ­ஜெர்சி ஆகிய 11 நக­ரங்­கள் போட்­டியை நடத்­தும்.

1970லும் 1986லும் உல­கக் கிண்ணப் போட்­டியை ஏற்று நடத்­திய மெக்­சி­கோ­வில் மெக்­சிகோ சிட்டி, குவா­ட­ல­ஹாரா, மாண்­டிரே ஆகிய மூன்று நகர்­கள் போட்­டியை நடத்­தும். ஆண்­க­ளுக்­கான உலகக் கிண்­ணப் போட்­டியை முதன்­மு­றை­யாக ஏற்று நடத்­தும் கன­டா­வில் வேன்­கூ­வர், டொரோண்டோ ஆகிய நகர்­களில் ஆட்­டங்­களில் நடை­பெறும்.

இவ்­வே­ளை­யில், வட அமெ­ரிக்­கா­வில் மற்ற அனைத்து விளை­யாட்­டு­க­ளை­யும் காற்­பந்து விஞ்­சி­வி­டும் என்று சுவிட்­சர்­லாந்து நாட்ட­வ­ரான இன்­ஃபண்­டினோ உறுதி­பட கூறி­னார்.

அமெ­ரிக்­கா­வில் காலங்­கா­ல­மாக பொழுது­போக்கு விளை­யாட்­டா­க 'பேஸ்பால்' கருத்­தப்­பட்டு வரு­கிறது. கன­டா­வில் ஐஸ் ஹாக்கியே ஆதிக்­கம் செலுத்தி வரு­கிறது. மெக்­சிகோ மட்­டுமே காற்­பந்து விளை­யாட்டை ராஜா­வாகக் கரு­து­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!