கடைத்தொகுதியை தரைமட்டமாக்கிய ரஷ்ய ஏவுகணை; பலர் பலி

கடைத்தொகுதியை தரைமட்டமாக்கிய ரஷ்ய ஏவுகணை; பலர் பலி

1 mins read
0408e896-8e9d-4c83-88a5-8d069ca29457
உயிர்பிழைத்தோரைத் தேடி மீட்கும் பணியில் மீட்புப் பணியாளர்கள் தீவிரமாக இறங்கியுள்ளனர். படம்: ஏஎஃப்பி -

ரஷ்யா நடத்­திய ஏவு­கணைத்

தாக்­கு­த­லில் உக்­ரே­னின் மத்­திய பகு­தி­யில் கடைத்­தொ­குதி ஒன்று உருத்தெரியாமல் அழிந்தது.

நேற்று முன்தினம் நடத்­தப்­பட்ட இத்தாக்­கு­த­லில் குறைந்­தது 18 பேர் உயி­ரி­ழந்­த­னர்.

காய­முற்ற 25 பேர் மருத்­து­வ­

ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­ட­தாக உக்­ரே­னிய அதி­கா­ரி­கள் தெரி­வித்­

த­னர். உக்­ரே­னின் லிசி­சான்ஸ்க்

நக­ரில் நிகழ்ந்த இந்­தத் தாக்­கு­

த­லுக்கு ஐநா­வும் மேற்­கத்­திய நாடு­களும் கடும் கண்­ட­னம் தெரி­வித்­துள்­ளன. இடி­பா­டு­க­ளுக்கு அடி­யில் மேலும் பலர் சிக்­கி­யி­ருப்­ப­தா­கக் கூறிய மீட்­புப் பணி­யா­ளர்­கள் அவர்­க­ளைத் தேடி மீட்­கும் பணி­யில் தீவி­ர­மாக இறங்­கி­யுள்­ள­னர்.

ஏறத்­தாழ 36 பேரைக் காண­வில்லை என்று தெரி­விக்­கப்­பட்­டது.

எனவே மரண எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப் படுகிறது.

அவர்­க­ளது நிலை குறித்து எது­வும் தெரி­யா­மல் சொல்­லொண்ணா துய­ரில் தவிக்­கும் குடும்­பத்­தி­னர், தாக்­கு­தல் நிகழ்ந்த இடத்­துக்கு அரு­கில் நீண்ட வரி­சை­யில்

காத்­துக்­கொண்­டி­ருப்­ப­தாக அதி­கா­ரி­கள் கூறி­னர்.

இந்­நி­லை­யில், கடைத்­தொ­கு­தி­யைக் குறி­வைத்து ரஷ்யா இரண்டு ஏவுகணை­க­ளைப் பாய்ச்­சி­ய­தாக உக்­ரே­னிய அதி­பர் வொலோ­டி­மிர் ஸெலென்ஸ்கி குற்­றம் சாட்­டி­னார்.

அப்­போது அக்­க­டைத்­தொ­கு­தி­யில் 1,000க்கும் மேற்­பட்­டோர் இருந்­த­தாக அவர் தெரி­வித்­தார்.

இதற்கிடையே, ஜி-7 மாநாட்டில் கலந்துகொண்ட தலைவர்கள் ரஷ்யாவின் செயல் ஏற்க முடியாதது என்று சாடியுள்ளனர்.

இதற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினும் தாக்குதலுக்குக் காரணமான மற்றவர்களும் பதில் சொல்லியே ஆகவேண்டும் என்று அவர்கள் கூறினர்.