பார்க்கின்சன்ஸ் நோயைக் கையாள உடற்பயிற்சி

ஐந்­தாண்­டு­க­ளுக்கு முன்பு தான் பார்க்­கின்­சன்ஸ் நோய்க்கு ஆளா­னது தெரிந்த பிறகு 76 வயது மைக்­கல் பாங் மேசைப்­பந்து விளை­யாட ஆரம்­பித்­தார். அதேபோல் இந்­நோய்க்கு ஆளான 68 வயது யோங் லெக் கியோங் தின­மும் இரண்டு மணி­நே­ரத்­துக்­கும் மேல் நடந்து இறுக்­க­மான தசை­கள் தேற உடற்­ப­யிற்சி மேற்­கொள்­கி­றார்.

50 வய­தைத் தாண்­டிய ஒவ்­வோர் 1,000 சிங்­கப்­பூ­ரர்­களிலும் மூவர் பார்க்­கின்­சஸ் நோய்க்கு ஆளா­கின்­ற­னர். பார்க்­கின்­சன்ஸ், அள­வுக்கு அதி­க­மாக இறுக்­கிக்­கொள்­ளும் தசை­கள், தசை அதிர்வு­கள் போன்ற பிரச்­சி­னை­களை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய மூளைக் குறை­பாடு. விழா­மல் பார்த்­துக்­கொள்­ளும் உட­லின் ஆற்­றல், சீரான பேச்சு போன்­ற­வற்­றி­லும் பாதிக்­கப்­பட்­டோர் சிக்­கல்­களை எதிர்­நோக்கலாம்.

பார்க்­கின்­சன்ஸ் நோய்க்கு சிகிச்சையோ மருந்தோ கிடை­யாது. ஆனால் அடிக்­கடி உடற்­ப­யிற்சி செய்து ஆரோக்­கி­ய­மாக இருப்­பது, அசை­வு­க­ளைச் சீராக வைத்­தி­ருக்க 'ஃபிசியோ­தெ­ரப்பி' நடவடிக்கையை மேற்­கொள்­வது போன்றவற்றின் மூலம் அதைக் கையாள முடி­யும் என்று வல்­லு­நர்­கள் கூறு­கின்­ற­னர்.

சிங்­கப்­பூ­ரின் சமூ­கம் தொடர்ந்து மூப்­ப­டை­யும்­போது பார்க்­கின்­சன்ஸ் நோய்க்கு ஆளா­வோ­ரின் எண்­ணிக்கை அதி­க­ரிக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தாக அலெக்­சாண்டிரா மருத்­து­வ­ம­னை­யின் நரம்­பி­யல் மருத்­து­வர் டான் சி சியேன்­னும் முதி­யோ­ருக்கு சிகிச்சை அளிக்­கும் மருத்­து­வர் பிரீத்தா வேணு­கோ­பா­லன் மேன­னும் தெரி­வித்­தனர். சில பார்க்­கின்­சன்ஸ் நோயா­ளி­கள் நுக­ரும் ஆற்­றலை இழப்­ப­துண்டு. திரு பாங் அத்­த­கை­யோ­ரில் ஒரு­வர்.

சிலர் விழா­மல் உடலை நிலை­யாக வைத்­தி­ருக்க சிர­மப்­ப­டு­வர். திரு யோங்­கிற்கு இந்­தப் பிரச்­சினை உண்டு.

நோய்க்கு ஆளாகி மூன்­றி­லி­ருந்து ஏழு ஆண்­டு­க­ளுக்­குள் சில­ருக்கு சக்­கர நாற்­கா­லி­யில் நட­மா­டும் நிலை ஏற்­ப­ட­லாம், சிலர் படுத்த படுக்­கை­யா­க­வும் ஆக­லாம். வேறு சில­ருக்கோ உடல்­நிலை 10லிருந்து 20 ஆண்­டு­க­ளுக்­குள் மோச­மடையும். உடல் ரீதி­யான பிரச்­சி­னை­கள் மட்­டு­மின்றி தூக்­க­மின்மை, மன அழுத்­தம் போன்ற சவால்­களை­யும் சிலர் எதிர்­நோக்­கக்­கூ­டும்.

இப்­ப­டிப்­பட்ட நோய்க்கு ஆளா­ன பிற­கும் மனந்­த­ள­ரா­மல் வாரந்­தோறும் ஐந்து முறை குடும்­பத்­தா­ரு­டன் மேசைப்­பந்து விளை­யா­டு­கி­றார் திரு பாங்.

"பார்க்­கின்­சன்ஸ் நோய்க்கு ஆளா­னால் தேவைப்­ப­டும்போது உடலை அசைப்­பது மெது­வ­டை­யும் என்­றும் அடிக்­கடி விழ நேரி­டும் என்­றும் எனக்­குத் தெரி­யும். உடல் அசை­வு­க­ளைச் சீராக்­க­வும் விழா­மல் பார்த்­துக்­கொள்­ள­வும் மேசைப்­பந்து உத­வும்," என்­றார் முன்­னாள் ஆய்­வுக்­கூட தொழில்­நுட்­ப­ரான திரு பாங். நீரில் உடற்­ப­யிற்சி செய்­யும்போது விழு­வ­தற்­கான சாத்­தி­யம் குறைவு. அத­னால் திரு பாங் நீச்­சலிலும் ஈடுபட்டு வருகிறார்.

இவர் 'ஃபிசியோ­தெ­ரபி' வகுப்பு­களுக்­கும் செல்கிறார்.

ஓய்­வு­பெற்ற பொறி­யா­ள­ரான திரு யோங் அடிக்­கடி விழக்­கூ­டிய அபா­யத்தை எதிர்­கொ­ள்ப­வர். இவ­ரைக் கவ­னித்­துக்­கொள்ள இவரின் மனைவியான 59 வயது ஓவ் செளட் போ தனது வேலையை விட நேரிட்டது. தனது 61வது வய­தில் திரு யோங்கிற்குத் தான் பார்க்­கின்­சன்ஸ் நோய்க்கு ஆளா­னது தெரி­ய­வந்­தது.

"உடலை ஏதே­னும் நட­வ­டிக்­கை­யில் ஈடு­ப­டுத்­திக்­கொண்டே இருந்­தால்­தான் சக்­கர நாற்­கா­லி­யின் உதவி தேவைப்­ப­டாது அல்­லது படுத்த படுக்­கை­யா­கும் நிலை வராது என்­பது அனு­ப­வத்­தில் நாங்­கள் கற்­றுக்­கொண்­டது," என்று திரு­வாட்டி ஓவ் குறிப்­பிட்­டார்.

திரு யோங்கும் 'ஃபிசியோ­தெ­ரபி' வகுப்­பு­க­ளுக்­குச் செல்கிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!