ராணுவத்தில் சேர அழைப்பு: அண்டை நாடுகளுக்கு தப்பி ஓடும் ர‌ஷ்ய ஆண்கள்

மாஸ்கோ: ர‌ஷ்ய ராணுவத்தில் ஆள்சேர்க்கும் நடவடிக்கைகள் அந்நாட்டில் துரிதப்படுத்தப்படும் வேளையில் பல ர‌ஷ்ய ஆண்கள் ராணுவத்தில் சேராமல் இருக்க சாலை வழியாக நாட்டைவிட்டே ஓடுகின்றனர்.

உக்ரேன் நாட்டின் மீது ர‌ஷ்யா போரை தொடங்கி இன்றுடன் (செப்டம்பர் 24) 7 மாதங்கள் ஆகிறது. மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரேன் ராணுவம் ர‌ஷ்யப் படைகளை எதிர்த்து தொடர்ந்து சண்டையிட்டு வருகிறது.

இதனால் உக்ரேனை தன்வசப்படுத்தும் ர‌ஷ்யாவின் எண்ணம் ஈடேறுவதில் சிக்கல் நீடிக்கிறது. எனினும் இலக்கை அடையும் வரை போர் தொடரும் என ர‌ஷ்ய அதிபர் புட்டின் திட்டவட்டமாக கூறி வருகிறார்.

அதை உறுதிப்படுத்தும் விதமாக உக்ரேன் மீதான போரை மேலும் தீவிரப்படுத்த 3 லட்சம் ர‌ஷ்யர்களை அணி திரட்ட உள்ளதாக அண்மையில் அறிவித்தார்.

போருக்காக அணி திரட்டப்படுபவர்கள் யாரும் கட்டாயப்படுத்தப்பட மட்டார்கள் என்றும், ஆயுதப்படைகளில் பணியாற்றியவர்கள், பொருத்தமான அனுபவம் உள்ளவர்கள் அழைக்கப்படுவார்கள் என்றும் ர‌ஷ்ய ராணுவ‌ அமைச்சர் செர்ஜி ஷோய்கு கூறினார்.

எனினும் போருக்கு அணி திரட்டும் புட்டினின் அறிவிப்பு வெளியானது முதல் ர‌ஷ்யாவை சேர்ந்த ஆண்கள் அவசர அவசரமாக நாட்டை விட்டு வெளியேறி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ர‌ஷ்யர்கள் தங்களின் அண்டை நாடான ஜார்ஜியாவுக்கு செல்ல விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதால் போரில் பங்கேற்பதை தவிர்க்க விரும்பும் ர‌ஷ்ய ஆண்கள் பலரும் சாலை மார்க்கமாக ஜார்ஜியாவுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக ர‌ஷ்யா-ஜார்ஜியா எல்லையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பல கிலோமீட்டர் தொலைவுக்கு கார்கள் அணிவகுத்து நிற்கின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!