மலேசிய கோழி ஏற்றுமதி: அனுமதி பெறுவதில் தாமதம்

கோலா­லம்­பூர்: சிங்­கப்­பூ­ருக்கு மீண்­டும் கோழி இறைச்­சியை ஏற்­று­மதி செய்ய மலே­சி­யா­வின் கோழிப் பண்ணை உரி­மை­யா­ளர்­கள் ஆவ­லாக இருக்­கின்­ற­னர். எனி­னும், அவர்­க­ளுக்கு அனு­மதி இன்­ன­மும் வழங்­கப்­ப­ட­வில்லை என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மலே­சி­யா­வில் கோழி இறைச்­சியை ஏற்­று­மதி செய்­வ­தற்­கான தடை அடுத்த மாதம் விலக்­கப்­ப­ட­வுள்­ளது. அதைத் தொடர்ந்து அந்­நாட்­டின் சில பண்­ணை­க­ளுக்­குக் கோழி இறைச்­சியை ஏற்­று­மதி செய்ய அனு­மதி வழங்­கப்­படும்.

ஆனால், இம்­மா­தம் தொடக்­கத்­தி­லி­ருந்து அனு­ம­திக்கு விண்­ணப்­பம் செய்த பல பண்ணை உரி­மை­யா­ளர்­க­ளுக்கு இன்­ன­மும் அனு­மதி வழங்­கப்­ப­ட­வில்லை. அனு­மதி எப்­போது கிடைக்­கும் என்­பது குறித்­தும் அவர்­க­ளுக்­குத் தெரி­ய­வில்லை.

"அனு­ம­திக்கு விண்­ணப்­பிக்க எங்­க­ளுக்கு ஒரு நாள்­கூட ஆவ­தில்லை. ஆனால், அதற்­குப் பிறகு அது கிடைக்க நீண்ட காலம் ஆகிறது," என்று சிலாங்­கூர் கோழிப் பண்­ணைச் சங்­கத்­தின் தலை­வ­ரான இட்­ரஸ் ஸைனல் அபி­டின் கூறி­னார்.

கடந்த ஜூன் மாதம் ஒன்­றாம் தேதி­யன்று மலே­சி­யா­வில் கோழி ஏற்­று­ம­திக்­குத் தடை விதிக்­கப்­பட்­டது. அடுத்த மாதம் தடை விலக்­கப்­படும் என்று சென்ற மாதம் 29ஆம் தேதி­யன்று அறி­விக்­கப்­பட்­டது.

மலே­சி­யா­வின் வேளாண், உண­வுத் துறை­கள் அமைச்­சின்­கீழ் உள்ள விலங்­கு­ந­லப் பிரி­வு­தான் அனு­மதி விண்­ணப்­பங்­க­ளைக் கையாள்­வ­தா­கத் திரு இட்­ரஸ் தெரி­வித்­தார். எனி­னும், அமைச்­சர்­கள் உள்­ளிட்­டோ­ரின் ஒப்­பு­த­லுக்­காக அப்­பி­ரிவு காத்­தி­ருக்­க­வேண்­டி­ய­தாக அதன் அதி­கா­ரி­கள் கூறி­யதை அவர் குறிப்­பிட்­டார். இத­னால் சிலாங்­கூர் மாநி­லத்­தில் பண்ணை உரி­மை­யா­ளர்­கள் குறைந்த விலை­யில் கோழி இறைச்­சியை விற்­க­வேண்­டிய சூழ­லும் உரு­வா­கி­யுள்­ள­தாக அவர் சொன்­னார்.

தடை விதிக்­கப்­பட்­ட­தற்கு முன்பு மலே­சியா மாதந்தோ­றும் 3.6 மில்­லி­யன் கோழி­களை சிங்­கப்­பூ­ருக்கு ஏற்­று­மதி செய்து வந்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!