சிங்கப்பூரிலிருந்து கடத்தப்பட்ட 18 டன் அரிசி பறிமுதல்

சிங்கப்பூரில் இருந்து 100,000 ரிங்கிட் (28,940 சிங்கப்பூர் வெள்ளி) மதிப்பிலான அரிசியை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று ஜோகூர் பாருவில் உள்ள பாங்குனான் சுல்தான் இஸ்கந்தரின் சுங்க, குடிவரவு, தனிமைப்படுத்தப்படும் வளாகத்தில் (சிஐக்யூ) தடுத்து வைக்கப்பட்டது.

அந்த வளாகத்தின் சரக்கு பாதையில் 30 வயது நிரம்பிய லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டதாக மலேசிய தனிமைப்படுத்தல், பரிசோதனை சேவைப் பிரிவின் ஜோகூர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

“20 பெரிய சாக்குகளில் இருந்த 18 டன் அரிசியை இறக்குமதி செய்வதற்கான சரியான ஆவணங்கள் அவரிடம் இல்லை,” என்று அந்தப் பிரிவு புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது. கடந்த வியாழக்கிழமை மாலை 3 மணியளவில் அரிசி கைப்பற்றப்பட்டதாக அது கூறியது.

அரிசி மூட்டைகள் வெவ்வேறு பொருள்களாக தெரிவிக்கப்பட்டிருந்தது சோதனையின்போது கண்டுபிடிக்கப்பட்டது.

நெல், அரிசி ஒழுங்குமுறை பிரிவுக்கு அந்த வழக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை தெரிவித்தது.

மலேசியாவுக்குள் கொண்டுவரப்படும் வேளாண் பொருள்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நாட்டின் எல்லைப் பகுதிகளில் அமலாக்கத்தை மேற்கொள்வதில் மலேசிய தனிமைப்படுத்தல், பரிசோதனை சேவைப் பிரிவு உறுதியளித்திருப்பதாக அது கூறியது.

“மலேசியாவின் உயிர் பாதுகாப்புக் கட்டுப்பாட்டை வலுப்படுத்த மற்ற அமலாக்க முகவைகள், துறைகளுடன் தொடர்ந்து பணியாற்றுவோம்,” என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!