பீரங்கிக் குண்டுகளை பாய்ச்சிய வடகொரியா; தென்கொரியத் தீவில் எச்சரிக்கை

சோல்: வடகொரியா சுமார் 200 பீரங்கிக் குண்டுகளைப் பாய்ச்சியதைத் தொடர்ந்து தென்கொரியாவின் இயோன்பியோங் தீவில் வசிப்போருக்கு வீடுகளிலிருந்து வெளியேறுமாறு வெள்ளிக்கிழமையன்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

தென்கொரிய தற்காப்பு அமைச்சு இத்தகவலை வெளியிட்டது. “இயோன்பியோங் தீவுக்கு அருகே வடகொரியா சுமார் 200 குண்டுகளைப் பாய்ச்சியது,” என்று தென்கொரியா தற்காப்பு அமைச்சு அதிகாரி ஒருவர் செய்தியாளர் கூட்டத்தில் குறிப்பிட்டார்.

வீடுகளிலிருந்து வெளியேறுமாறு அத்தீவில் வசிப்போர் கேட்டுக்கொள்ளப்பட்டாக இயோன்பியோங் அதிகாரிகள் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர்.

தென்கொரிய-வடகொரிய எல்லைக்கு அருகே உள்ள கடற்பகுதியில் தென்கொரிய ராணுவம் துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டதாக அப்பகுதிவாசிகளுக்குத் தகவல் அளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

வடகொரியா பாய்ச்சிய குண்டுகளால் சேதம் ஏதும் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.

வடகொரியா ராணுவ ரீதியாக மிரட்டல் விடுத்ததற்கான அறிகுறிகள் தலைதூக்கியதைத் தொடர்ந்து வீடுகளிலிருந்து வெளியேறுமாறு இயோன்பியோங் வாசிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதென யொன்ஹாப் செய்தி நிறுவனம் கூறியது. உள்ளூர் நேரப்படி பிற்பகல் 12.02 மணிக்கும் 12.30 மணிக்கும் பாதுகாப்புக் கூடாரங்களுக்குச் செல்லுமாறு அத்தீவின் மேற்குப் பகுதியில் வசிப்போருக்குார் கேட்டுக்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்தது.

2010ஆம் அண்டில் இயோன்பியோங் தீவின்மீது வடகொரியா பலமுறை பீரங்கிக் குண்டுகளைப் பாய்ச்சியது. அதில் பொதுமக்களில் இருவர் உட்பட நால்வர் கொல்லப்பட்டனர்.

அது, 1953ஆம் ஆண்டு நடந்த கொரியப் போருக்குப் பிறகு வடகொரியா, தென்கொரியமீது நடத்திய ஆக மோசமானத் தாக்குதல்களில் ஒன்றாகும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!