ஐரோப்பிய ஒன்றிய ராணுவத்தை அமைக்க அழைப்பு விடுக்கும் இத்தாலி

ரோம்: அமைதியைக் காக்கவும் பிரச்சினைகளைத் தவிர்க்கவும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஒன்றிணைந்து தனிப்பட்ட ராணுவத்தை அமைக்க வேண்டுமென்று இத்தாலிய வெளியுறவு அமைச்சர் அண்டோனியோ டஜானி கேட்டுக்கொண்டுள்ளார்.

நாளிதழ் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில், தற்காப்பு தொடர்பில் ஐரோப்பிய நாடுகளின் அணுக்கமான ஒத்துழைப்பு தமது கட்சியின் முன்னுரிமை என்றார் அவர். ஃபோர்ஸா இத்தாலியா கட்சிக்கு அவர் தலைமைப் பொறுப்பேற்றுள்ளார்.

“உலகில் அமைதியை நிலைநாட்ட விரும்பினால் அதற்கு ஐரோப்பிய ராணுவம் கட்டாயம் தேவை. செயல்திறனுள்ள ஐரோப்பிய வெளியுறவுக் கொள்கையைக் கொண்டிருப்பதற்கான முதற்கட்ட அடிப்படைத் தேவை இது,” என்று அமைச்சர் கூறினார்.

அமெரிக்கா, சீனா, இந்தியா, ரஷ்யா போன்ற வல்லரசுகள் நிறைந்திருக்கும் உலகில், மத்திய கிழக்கு முதல் இந்தோ-பசிபிக் வரை நெருக்கடிகள் நிலவும் வேளையில், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்லோவேனியா போன்ற நாடுகளின் குடிமக்களைக் காப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் போன்ற அமைப்புகளால் மட்டுமே முடியும் என்றார் அவர்.

ஈராண்டுக்குமுன் உக்ரேன் மீது ரஷ்யா படையெடுத்ததிலிருந்து, ஐரோப்பியத் தற்காப்பு ஒத்துழைப்பு அதிகம் வலியுறுத்தப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!