சீனாவில் வெள்ளம்; சிலர் மரணம், பலர் வெளியேற்றம்

பெய்ஜிங்: சீனாவின் மக்கள்தொகை ஆக அதிகமாக இருக்கும் மாநிலமான குவாங்டோங்கில் வெள்ளப்பெருக்கால் குறைந்தது 110,000 பேர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

குறைந்தது நால்வர் மாண்டனர், 10 பேரைக் காணவில்லை என்று சீன அரசாங்கத்துக்குச் சொந்தமான ஊடகங்கள் தெரிவித்தன. பிபிசி ஊடகம் இத்தகவல்களை வெளியிட்டது.

பல நிலப்பகுதிகள் பெரிய அளவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது அரசாங்க ஊடகங்கள், இணையம் ஆகியவற்றில் வெளியான காணொளிகளிலும் படங்களிலும் தெரிந்தது. இடுப்பு வரை இருக்கும் வெள்ள நீரில் மீட்புப் பணியாளர்கள் மக்களைப் படகுகளில் அழைத்துச் செல்வதும் காணப்பட்டது.

பல முக்கிய ஆறுகளில் நீர் கரை புரண்டோடியது. அவற்றில் நீரின் அளவு அபாயக் கட்டத்தைத் தொட்டதாகவும் நிலைமையை அதிகாரிகள் உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

குவாங்டோங்கில் உள்ள ஓர் ஆற்றில் நீரின் அளவு நூறாண்டு காலத்தில் காணப்படாத அளவைத் தொடக்கூடும் என்று திங்கட்கிழமையன்று (ஏப்ரல் 22) எச்சரிக்கப்பட்டிருந்தது.

குவாங்டோங்கின் பெரும்பாலான பகுதிகள் பெர்ல் ஆற்றுக்கு அருகே உள்ள தாழ்வான பகுதிகளாகும். கடல் நீரின் அளவு அதிகரிப்பது, புயல் போன்ற காரணங்களால் அப்பகுதிகளில் அடிக்கடி வெள்ளம் ஏற்படும் அபாயம் இருக்கும்.

குவாங்டோங்கில் சுமார் 127 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். அப்பகுதி சீனாவின் முக்கிய உற்பத்தித் தளமாக விளங்குகிறது.

தற்போது வெள்ளத்தால் குவாங்டோங் தலைநகர் குவாங்ஜூ மட்டுமின்றி ‌ஷாவ்குவான், ஹேயுவான் உள்ளிட்ட நகரங்கள் ஆக அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

வார இறுதியில் குவாங்டோங் முழுவதும் சுமார் 1.16 மில்லியன் வீடுகளில் மின்சாரத் தடை ஏற்பட்டது. எனினும், ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 21) இரவுக்குள் பாதிக்கப்பட்ட 80 விழுக்காட்டுப் பகுதிகளில் பிரச்சினை சரிசெய்யப்பட்டது.

தொடர் மழையால் குவாங்ஜூவின் பாயுன் அனைத்துலக விமான நிலையத்தில் பல விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன அல்லது தாமதமாயின. மேலும், குறைந்தது மூன்று நகரங்களில் பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

குவாங்டோங்கில் பல வீடுகள் இடிந்து விழுந்தன அல்லது பெரும் சேதத்துக்கு உள்ளாயின. வெள்ளத்தால் கிட்டத்தட்ட 140.6 மில்லியன் யுவென் (26.41 மில்லியன் வெள்ளி) மதிப்பில் நேரடியான பொருளியல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் கணித்துள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!