மரணம் தந்த சோகத்திலும் சிகரம் தொட்ட சரத்

ஜிசிஇ மேல்நிலைத் தேர்வு (ஏ நிலை) இறுதித் தேர்வுகளுக்கு மூன்று மாதங்களே இருந்தபோது 21 வயது சரத் அலெக்சாண்டராவின் தாயார் மரணமடைந்தார். கிட்டத்தட்ட மூன்று ஆண்டு

களாக அவர் புற்றுநோயால் அவதிப்பட்டாலும் முக்கியமான தேர்வு நெருங்கும் வேளையில் அவரது உயிர் பிரியும் என்று அவர் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.

“ஒவ்வொரு நாளும் பள்ளி முடிந்து வீடு திரும்பும்போது என் தாயார் அந்தக் கொடிய நோயின் காரணமாக அவதிப்படும் காட்சி என்னை வெகுவாக பாதித்தது.

“இருப்பினும், அவரைக் கண்ணுங் கருத்துமாகப் பார்த்துக்கொள்வதில் எனக்குத் துளியும் தயக்கம் இருக்கவில்லை.

“அவரை அன்றாடம் பார்த்துக்கொள்வதில் எனக்கு மன உளைச்சலும் சோர்வும் ஏற்பட்ட போதிலும் அவர் என்னுடன் வீட்டிலேயே இருந்தது எனக்கு ஆறுதலாக இருந்தது.

“ஆனால் அவரது உடல்நிலை மோசமடைந்தது. மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தபோது, என் மனம் சுக்குநூறாக உடைந்துபோனது. மீளாத் துயரில் மூழ்கினேன். அவர் குணமடைய வாய்ப்பிருக்கும் என்று கடைசி வரை நம்பினேன். ஆனால் அவர் என்னைவிட்டு சென்றுவிட்டார்,” என்றார் சரத்.

தாயாரின் இறப்புக்கு முன்பே சரத் தமது படிப்பில் சவால்களை எதிர்நோக்கினார். உயர்நிலைப் பள்ளியில் வழக்கநிலை மாணவராக இருந்த அவர், ஜூரோங் பைனியர் தொடக்கக்

கல்லூரிக்குச் சென்றபோது பல பாடங்களில் முறையான பின்னணி இல்லாத மாணவராக இருந்தார். பள்ளி நடவடிக்கைகள் போக அவர் தாயாரையும் கவனித்துக் கொள்ளவேண்டிய நிலையில், சரத்தால் முதலாம் ஆண்டில் தேர்ச்சி பெற முடியவில்லை. மீண்டும் முதலாம் ஆண்டில் பயிலும் கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது.

“தொடக்கத்தில் கவலையாக இருந்தது. என் மீது அன்பு செலுத்தி, படிப்பில் அதிக அழுத்தம் தராத என் பெற்றோரை ஏமாற்ற விரும்பவில்லை. ஆனால் இப்போது நினைத்துப் பார்க்கும்போது முதலாம் ஆண்டு வகுப்பில் மீண்டும் படித்தது நல்லது என்று தோன்றுகிறது.

“வலுவான அடித்தளத்தைப் பெற வழிவகுத்தது. என் நேரத்தை மேலும் சீராக நிர்வகித்து, தேர்வுக்குத் தயாராக உதவியது,” என்று கூறினார் சரத்.

தாயார் இறந்த தினத்தன்று திரு சரத்திற்கு அறிவியல் செயல்முறைக்கான முன்னோட்டத் தேர்வு இருந்தது. ரசாயன செயல்முறைத் தேர்வு தினத்தன்று அவரது தாயாரின் இறுதிச் சடங்கு நடைபெற்றது. இருப்பினும், தேர்வுகளை எழுத வேண்டும் என்பதில் சரத் உறுதியாக இருந்தார், எழுதினார். இறுதிச் சடங்கு முடிந்ததும் அவர் தேர்வு எழுதுவதற்காகக் கல்லூரிக்குச் சென்றார்.

“நான் துன்பத்தில் வாடிய நேரங்களில் என் குடும்பம், நண்பர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் தந்த ஆதரவுதான் எனக்கு

சக்தியைத் தந்தது. என் உறவினர்கள் சிலர் நான் வசிக்கும் வட்டாரத்தில் குடியிருக்கிறார்கள் அதனால் அவர்களுடன் நெருங்கிய உறவு கொண்டுள்ளேன். என் தாயாருக்கு உடல்நலம் சரியில்லாதபோது நாங்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து ஓருவருக்கு ஒருவர் ஆதரவாக இருந்தோம். என் தந்தையும் எனக்கு பக்கபலமாக இருந்தார்,” என்றார் சரத். ஜூரோங் பைனியர் தொடக்கக்கல்லூரியில் குடியியல் (civics) துறை ஆசிரியர்களான பெணி லீ, கோ லீ லெங் ஆகியோரும் திரு சரத்துடன் அடிக்கடி பேசி, அவரை நலம் விசாரித்தனர்.

மற்ற பாட ஆசிரியர்களும் சரத்துக்குத் தேவையான ஆதரவையும் உதவிகளையும் வழங்கினர். 2017ஆம் ஆண்டில் மாணவ ஆலோ சனையாளராக (student councillor) இருந்த சரத் அந்த ஆண்டு பட்ட

மளிப்பு விழா நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களில் ஒருவராக இருந்தார். 2019ல் அவர் பள்ளியின் தூதரகக் குழுவிற்கு துணைத் தலை

வராகவும் நியமிக்கப்பட்டார். ‘ஏ’ நிலை தேர்வில் உள்ளூர் பல்கலைக்கழகத்திற்குச் செல்லும் அளவிற்கு சிறப்பாகத் தேர்ச்சி பெற்ற சரத் எதிர்காலத்தில் உளவியல் துறையில் பட்டத்தைப் பெற விரும்புகிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!