உள்ளூர் படைப்புக்கு உலக அரங்கில் அங்கீகாரம்

நம் உள்­ளூர் தமிழ் குறும்­ப­டம் ஒன்று அனைத்துலக அரங்­கில் கொடி­கட்டி பறக்­கின்­றது. மனதை வரு­டும் காட்­சி­கள், செவிக்கு விருந்­தூட்­டும் பின்­னணி இசை, இயல்­பான நடிப்பு என பாராட்­டுக்­கு­ரிய இந்த உள்­ளூர் தமிழ்/ஆங்­கில குறும்­ப­டத்­தின் தலைப்பு ‘வெயிட் ஃபார் மி’.

காது கேளாத குறை­பா­டு­டைய சரண்யா கதா­பாத்­தி­ரம், பாட்­டி­யின் அர­வ­ணைப்­பில் வளர்­கி­றாள். வாழ்க்­கை­யில் தான் பெற விரும்­பும் அன்­பும் காத­லும் எவ்­வாறு தன்னை வந்­த­டை­கின்­றன என்­பது­தான் கதைக் கரு.

இந்த 30 நிமிட குறும்­ப­டத்தை ‘காமி மீடியா’ (Gami Media), ‘மூவிங் இமேஜஸ் புரோ­டக்‌ஷன்ஸ்’ (Moving Images Productions) ஆகிய நிறு­வ­னங்­கள் இணைந்து தயா­ரித்­துள்­ளன.

இந்­தக் குறும்­ப­டம் சென்ற ஆண்டு லண்­ட­னில் நடை­பெற்ற அனைத்துலக திரைப்­பட தயா­ரிப்­பா­ளர் விழா­வில் (International Filmmakers Festival 2020) சிறந்த நடிகை விருது, சிறந்த இயக்­கு­னர் விருது, சிறந்த துணை நடிகை விருது மற்­றும் சிறந்த குரு­ம்படத்­திற்­கான விருது என்று நான்கு விரு­து­க­ளுக்கு நிய­மிக்­கப்­பட்­டது.

இதை­ய­டுத்து இவ்­வாண்­டின் ‘தோக்­கியோ லிஃப்ட் ஆப்’ எனும் திரைப்­பட விழா­வில் (Tokyo Lift-Off Festival 2020) கலந்­து­கொள்ள தேர்வு செய்­யப்­பட்­டுள்­ளது. அத்­தி­ரைப்­பட விழா­வில் ‘ட்ரென்ட்செட்­டர்ஸ்’ (trendsetters) பிரி­வின் இறுதி சுற்­றுக்­குத் தகுதி­பெற்ற ஒரே சிங்கப்பூர் குறும்­ப­டம் இது.

குறும்­ப­டத்தை இயக்­கிய திரு­மதி லெஷா சோனம், 31, சிறு வய­தி­லி­ருந்தே திரைப்­ப­டத் தயா­ரிப்­பி­லும் நடிப்­பி­லும் ஈடு­பட்டு வரு­கி­றார்.

2008ஆம் ஆண்­டி­லி­ருந்தே பல உள்­ளூர் தொலைக்­காட்சி நிகழ்ச்சி ­க­ளுக்­குத் தயா­ரிப்­பா­ளர், கதா­சி­ரி­யர் என பணியாற்றியதுடன் நடி­க­ரா­க­வும் உள்ளூர் நாடகங்களில் வலம் வந்­துள்­ளார்.

இவர் இயக்­கத்­தில் உரு­வான முதல் குறும்­ப­டம் இது. “இந்த குறும்­ப­டத்தை தயா­ரிக்க வேண்­டும் என்ற யோசனை எனக்கு 2017ல் தோன்­றி­யது. கடந்­தாண்டு என் கண­வர் சுரேந்­தி­ர­னின் ஆத­ர­வோடு, எனது நண்­பர் பவித்­ரன் நாத­னு­டன் இணைந்து இப்­ப­டத்தை உரு­வாக்க தொடங்­கி­னேன்.

“இக்­கு­றும்­ப­டம் இது­போன்ற நிய­ம­னங்­களைப் பெறு­மென்று நாங்­கள் எதிர்­பார்க்­க­வில்லை. ஆகஸ்ட் 2019 முதல் சில அனைத்துலக விழாக்­க­ளுக்­காக இக்­கு­றும்­ப­டத்தைச் சமர்ப்­பித்­தோம். குறும்­ப­டத்தை இம்­மா­தத்­திற்­குப் பிறகு பொது­மக்­க­ளுக்­காக திரை­யிட முடி­வெ­டுத்­துள்­ளோம்,” என்று தெரி­வித்­தார் திரு­மதி லெஷா.

இசைப்­பி­ரி­ய­ரான திரு­மதி லெஷா, குறும்­ப­டத்­தின் பின்­னணி இசைக்கு நிறைய முக்­கி­யத்­து­வம் கொடுத்­தி­ருக்­கி­றார்.

“படத்­திற்­கான சரி­யான பின்­னணி இசை­ய­மைப்­பா­ள­ரைக் கண்டு­பி­டிக்க நாங்­கள் சிர­மப்­பட்­டோம். நடிகை வித்யா பால­னின் ‘தும்­ஹாரி சுலு’ என்ற ஹிந்தி திரை­ப்ப­டத்­திற்­காக பின்­னணி இசை கொடுத்த கரண் குல்­கர்­னியை கூட நாங்­கள் தொடர்­பு­கொண்­டோம். நிதிப் பற்­றாக்­கு­றை­யால் அவ­ரின் சேவை­யைப் பெற முடி­யா­மல் போனது.

4 மாதங்­கள் கடு­மை­யான தேட­லுக்­குப் பிறகு, இக்­கு­றும்­ப­டத்­திற்கு அழ­கான இசையை வழங்­கிய பிர­பல மலே­சிய தமிழ் திரைப்­பட இசை அமைப்­பா­ளர் வர்­மன் இளங்­கோ­வனைத் தேர்வு செய்­தோம்,” என்று கூறி­னார்.

இக்­கு­றும்­ப­டத்­தைச் சொந்த செல­வில் தயா­ரித்த திரு­மதி லெஷா­விற்கு நிதி பற்­றாக்­குறை ஒரு பெரிய சவா­லாக இருந்­தது. குறும்­பட தயா­ரிப்­பிற்­கான நிதி உத­வி­களும் மானி­யங்­களும் அதி­கம் பெற முடி­யாத கட்­டத்­தில் தம்­மு­டைய தங்கை துணை தயா­ரிப்­பா­ள­ரா­னது தமக்கு ஆத­ரவாக இருந்தது என்றும் தெரி­வித்­தார்.

தொடர்ந்து திரை­ப்ப­டங்­களைத் தயா­ரிக்க விரும்­பும் அவர், “என்னை போன்று வளர்ந்து வரும் உள்­ளூர் திரைப்­பட தயா­ரிப்­பா­ளர்­கள் அனைத்துலக அள­வில் அங்கீ­கா­ரம் பெற ஊக்­கு­விக்­கும் வகை­யில் சற்று அதி­க­மான நிதி உதவி கிடைத்­தால் நன்­றாக இருக்­கும்,” என்று குறிப்­பிட்­டார்.

இதோடு, திரைப்­படத் தயா­ரிப்பு நிறு­வ­னங்­கள் மற்­றும் குழுக்­களி­டையே ஒத்­து­ழைப்­பும் இணைந்து செய­லாற்­றும் விருப்­ப­மும் இருந்­தால் பல சிறந்த படங்­க­ளைத் தயா­ரிக்க முடி­யும் என்று கூறி­னார்.

‘தோக்­கியோ லிஃப்ட் ஆப்’ திரைப்­பட விழா­வின் முடி­வு­க­ளுக்­காகக் காத்­தி­ருக்­கும் பட்­சத்­தில், ‘நியூ­யார்க் லிஃப்ட் ஆஃப்’ திரைப்­பட விழா­வில் (New York Lift-Off Festival) குறும்­ப­டம் தேர்­வு­செய்­யப்­பட்­டுள்­ளது என்ற நற்­செய்­தி­யை­யும் பெற்­ற­னர் படக்­கு­ழு­வி­னர். இந்­தத் திரைப்­பட விழா இம்­மா­தம் 31ஆம் தேதி வரை நடை­பெ­றும். பார்­வை­யா­ளர்­கள், தேர்வு செய்­யப்­பட்­டுள்ள படங்­க­ளைப் பார்த்து பிடித்த படத்­திற்கு வாக்­க­ளிக்­க­லாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!