சக்திக்கு சக்தி கொடுக்கும் ‘டிக் டாக்’

பல்­லாண்டு கால­மாக சமூக ஊட­கங்­களை நாம் பயன்­ப­டுத்தி வரும் முறை­யைப் புதிய சமூக ஊட­கத் தளங்­கள் மாற்றி வரு­கின்­றன. 2005ல் மைஸ்­பேஸ், 2008ல் ஃபேஸ்புக், பின்­னர் 2014ல் இன்ஸ்­ட­கி­ராம், இதற்­கி­டையே ஸ்னாப்­சாட், டுவிட்­டர், வீ சாட் என பல தளங்­கள் பிர­ப­ல­மா­கின.

மில்­லே­னி­யல் தலை­மு­றை­யினரை ஈர்த்த இன்ஸ்­ட­கி­ராம் காலம் சென்று இப்­போது ‘டிக் டாக்’ மோகம் அதி­க­ரித்து வரு­கிறது. இளை­யர்­களை மட்­டு­மல்ல, நடு­வ­ய­தி­ன­ரைக்­கூட தன் வச­மாக்­கி­யுள்­ளது ‘டிக் டாக்’. மக்­கள் ஒரு­வர் மற்­றொ­ரு­வ­ரு­டன் இணைய தனித்­து­வ­மான புதிய வழி­களை வழங்­கு­கிறது இந்­தச் செயலி.

இசை, ஓசைக்­கேற்ற உதடு ஒத்­தி­சைவு காணொ­ளி­கள் மற்­றும் மைக்ரோ-வீடியோ ஆகி­ய­வற்­றின் கல­வை­யான டிக் டாக்கை முதல்­மு­றை­யாக பயன்­ப­டுத்­தும்­போது சற்று கடி­ன­மாக இருக்­கும்.

எனி­னும், இதன் வச­தி­க­ளைப் பயன்­ப­டுத்தி நகைச்­சுவை, நட­னம், முக ஒப்­பனை, சமூக கருத்து, இசை போன்ற பல வகை­யான காணொ­ளி­களை இளை­யர்­கள் பதி­வேற்­றம் செய்­கின்­ற­னர். தலை­முறை ‘இஸெட்’ இளை­யர்­களே டிக் டாக்கை அதி­கம் பயன்­ப­டுத்து­கி­றார்­கள். இத்­த­ளத்­தில் பதி­வேற்­றப்­படும் சில பதி­வு­கள் இளை­யர்­க­ளுக்கு பொருத்­த­மா­ன­வை­யாக இல்­லா­விட்­டா­லும் பெரும்­பா­லா­னோ­ரின் பதி­வு­கள் ரசிக்­கக்­கூ­டி­ய­வை­யா­க­வும் கருத்­துள்­ள­வை­யா­க­வும் அமை­கின்­றன.

நான்கு ஆண்­டு­க­ளாக ‘கருமை நிற தோற்­றம் கொண்ட பெண்’ எனும் தமது டிக் டாக் பக்­கத்­தில் நகைச்­சுவை, ஆடல், சமூக கருத்து போன்­ற­வற்றை உள்­ள­டக்­கிய பல காணொ­ளி­களை வெளி­யிட்டு வரு­கி­றார் சக்தி மேகனா, 22.

கருமை நிற தோற்­றம் கொண்ட பெண், சிங்­கப்­பூர் இந்­தி­யர், தமி­ழர், இளை­யர், புலம்­பெ­யர்ந்த பெற்­றோ­ரின் பிள்ளை என தமது பல அடை­யா­ளங்­களை நகைச்­சுவை நாடக, உரை­யா­டல் பாணி­யில் பலர் ரசித்து புரிந்­து­கொள்­ளும் விதத்­தில் காணொளி எடுத்து வரு­கி­றார் சக்தி.

வீட்­டில் தாயார், தந்­தை­யு­ட­னான உரை­யா­டல்­கள், சமூ­கத்­தில் நடை­பெ­று­பவை என அன்­றாட வாழ்க்கை நடை­மு­றை­களை நகைச்­சுவை நாட­க­மாக வடி­வ­மைத்து பல­ரின் கவ­னத்தை ஈர்த்­துள்­ளார் இவர்.

சிறு வய­தில் பள்­ளிச் சூழல் சக்­திக்கு ஏற்ற ஒன்­றாக இல்லை. பிற மாண­வர்­க­ளின் கேலி, கிண்­ட­லுக்கு ஆளான சக்­திக்கு ஆறு­த­லாக இருந்­தன அவர் பார்த்து வளர்ந்த யுடி­யூப் காணொ­ளி­கள்.

குறிப்­பாக, பிர­பல யுடி­யூப் கலைஞர் லில்லி சிங்­கின் காணொ­ளி­கள், தமக்கு தைரி­யத்­தை­யும் ஊக்­கத்­தை­யும் தந்­த­தாக சக்தி கூறு­கி­றார். தமது உணர்ச்­சி­க­ளை­யும் திற­னை­யும் வெளிப்­ப­டுத்த 2018ஆம் ஆண்­டில் டிக் டாக் தளத்­தில் காணொ­ளி­களை இவர் வெளி­யி­டத் தொடங்­கி­னார்.

“இன்­னும் சில ஆண்­டு­களில் டிக் டாக் இருக்­குமா இல்­லையா என்­பது எனக்­குத் தெரி­யாது. ஆனால், இது­போன்ற சமூக ஊடகத் தளங்­கள் உரு­வெ­டுத்­துக்­கொண்­டு­தான் இருக்­கும். மக்­களை இணைக்­கும் சக்தி சமூக ஊட­கத்­திற்கு உண்டு. இதைப் பயன்­படுத்தி மக்­க­ளி­டம் நல்ல கருத்து­களைக் கொண்­டு­சேர்க்க வேண்­டும் என்­பதே எனது நோக்­கம்,” என்று கூறிய சக்தி, யதார்த்­த­மான, உண்­மை­யான கருத்­து­களை வெளிப்­ப­டுத்­தும் காணொ­ளி­களை உரு­வாக்க வேண்­டும் என்­ப­தில் உறு­தி­யாக உள்­ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!