ஆறாத மன ரணத்துக்கு ஆறுதல் தரும் சவாரி

பொன்­மணி உத­ய­கு­மார்

 

ஊட்­டிக்­குச் சுற்­றுலா சென்­ற­போது குதி­ரை­யு­டன் ஏற்­பட்ட முதல் சந்­திப்­பில் அது­வரை அனு­ப­வித்­தி­ராத இன்­பத்தை லாவண்யா சிவா­னந்­தன், 26, பெற்­றார். கவ­லை­களை மறக்­க­டித்த அந்­தக் குதி­ரைச் சவா­ரியை இந்­நாள்­வரை அவ­ரால் மறக்க முடி­ய­வில்லை.

பின்னாளில் ரிபப்­ளிக் பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யில் நிகழ்ச்சி நிர்­வா­கத் துறை­யில் பயின்ற காலத்தில் அந்­தக் குதி­ரைச் சவாரி மீண்­டும் தனக்­குத் தேவைப்­

ப­டு­வ­தாக அவ­ருக்­குத் தோன்­றி­யது. அதில் கிடைத்த மன­நி­றைவு மீண்­டும் வேண்­டும் என்று லாவண்யா நினைத்­தார்.

அங்கு உள­வி­யல் சங்­கத் தலை­வ­ராக இருந்த லாவண்யா, மன­ந­லம் தொடர்­பான கருத்­த­ரங்கு ஒன்­றுக்கு ஏற்­பாடு செய்­த­போது குதி­ரை­யைக் கொண்டு உள­வி­யல் ஆத­ரவு வழங்­கும் முறை­யைப் பற்றி அறிந்து­கொண்­டார். அதிர்ஷ்­ட­வ­ச­மாக ‘தெரிஸ்’ (Therapeutic & Educational Riding in Singapore) அமைப்­பின் நிறு­வ­னர் திரு­வாட்டி ஜெஸ்­ஸி­யின் தொடர்­பும் அவ­ருக்­குக் கிடைத்­தது.

அவர் மூலம் ‘தெரிஸ்’ பற்றி மேலும் அறிந்­து­கொண்ட லாவண்யா, குதி­ரை­

க­ளு­டன் இணைந்து வேலை செய்­வ­தைத் தன் வாழ்க்­கைத் தொழி­லாக்­கிக்­கொள்ள தீர்­மா­னித்­தார்.

தெரிஸ் அமைப்­பில் பயிற்சி ஊழி­ய­ரா­கச் சேர ஜெஸ்­ஸி­யி­டம் அவர் கேட்­டுக்­கொண்­டார். குதி­ரை­கள் மீது லாவண்யா கொண்­டி­ருந்த அன்­பை­யும் அவ­ரது உறு­தி­யை­யும் கண்டு ஜெஸ்ஸி அவ­ருக்கு அந்த வாய்ப்­பைத் தந்­தார்.

அமைப்­பில் ஈராண்­டு­க­ளாக பயிற்சி பெற்ற லாவண்யா, உள­வி­யல் அறி­வி­யல் துறை­யில் தன் இள­நி­லைப் பட்­டப் படிப்பை மேற்­கொண்­டார். இதற்­காக ஜேம்ஸ் குக் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் பயின்று, இன்று தெரிஸ் அமைப்­பில் ஓர் உள­வி­யல் நிபு­ண­ராக உள்­ளார்.

சிறு­வ­ய­தில் பல­முறை தனி­மையை உணர்ந்த லாவண்யா, தன் உணர்­வு­க­ளைப் பற்­றிக் கூற யாரு­மில்­லா­மல் தவித்­தி­ருக்­கி­றார். கடந்த மூன்று ஆண்­டு­க­ளாக குதி­ரை­க­ளு­டன் நேரத்­தைச் செல­வ­ழித்து வரும் இவர், அவற்­றின் உத­வி­யு­டன் மற்­ற­வர்­களின் மன­ந­லம் மேம்­பட உதவி வரு­கி­றார்.

சிறப்­புத் தேவை­க­ளு­டைய தம்­பி­யு­டன் வளர்ந்த லாவண்யா, இன்று அதி­க­மாக குழந்­தை­க­ளுக்­கும் பதின்ம வய­தி­ன­ருக்­கும் ஆலோ­சனை வழங்கி வரு­கி­றார்.

சிறப்­புத் தேவை­கள் அல்­லது பெரு­மூளை வாதம் (Cerebral Palsy) போன்ற கடு­மை­யான பாதிப்­பு­க­ளு­டைய குழந்­தை­

க­ளுக்கு தெரிஸ் அமைப்­பின் ஆலோ­சனை முறை­கள் உத­வு­வ­தாக இவர் கூறுகிறார்.

மன அழுத்­த­மும் பதற்­ற­மும் கடு­மை­யல்­லாத பாதிப்­பு­கள் எனச் சிலர் கரு­தி­னா­லும் இவற்­றால் பாதிப்படைவர்களுக்கு மன­நல உதவி தேவைப்­ப­டு­கிறது. அந்­நே­ரத்­தில் தயங்­கா­மல் உதவி நாடு­மாறு லாவண்யா கேட்­டுக்­கொண்­டார்.

வித்­தி­யா­ச­மான நட­வ­டிக்­கைள் அடங்­கிய 45 நிமி­டச் சந்­திப்­பு­கள் மூலம் தெரிஸ் வழங்­கும் உள­வி­யல் ஆலோ­ச­னை­கள், கட்­டுப்­ப­டி­யான விலை­யில் கிடைப்­ப­தாக லாவண்யா கரு­து­கி­றார். அது­போக தெரிஸ் அமைப்­பின் உத­வியை நாடி வரும் ஒவ்­வொ­ரு­வ­ரின் தேவைக்­கேற்ப, ஒவ்­வொரு சந்­திப்­பும் திட்­ட­மி­டப்­ப­டு­வ­தாக லாவண்யா கூறுகிறார். குழந்­தை­க­ளுக்கு ஆலோ­சனை வழங்­கி­வரும் லாவண்யா, பிள்­ளை­க­ளின் பெற்­றோ­ரு­டன் கலந்­து­ரை­யாடி அவர்­க­ளின் மன­நல மேம்­பாட்­டைக் கண்­கா­ணிக்க உத­வு­கி­றார்.

குதிரை என்­றாலே பொழு­து­போக்­காக சவாரி செய்­யும் ஒரு விலங்கு என்ற எண்­ணத்தை மாற்­று­வது பெரும் சவால் என்­றார் லாவண்யா. தெரிஸ் அமைப்­பின் மருத்­து­வச் சேவை­கள் பற்றி பல­ரும் அறிந்­தி­ருக்­க­வில்லை என்­றும் தெரி­விக்கிறார்.

மற்­ற சேவை­கள் போல் ஓர் அறைக்­குள் இல்­லா­மல் இயற்­கைப் பின்­ன­ணி­யில் அமைப்­பின் சேவை­கள் அமைந்­தி­ருக்­கும். ஆனால், சில நேரங்­களில் வானிலை மாற்­றம், நிலப் பற்­றாக்­குறை, குதி­ரை­கள் எளி­தில் மிர­ளும் தன்மை போன்­ற­வற்­றால் சேவை வழங்­கு­வ­தில் சவால்­கள் உண்டு என்று லாவண்யா குறிப்­பிட்­டார்.

லாவண்யா தற்­போது பகு­தி­நேர வேலை­யா­கக் குழந்­தை­க­ளைப் பார்த்­துக்­கொள்­கி­றார். குதி­ரை­கள் சார்ந்த பகு­தி­நே­ரப் படிப்­பை­யும் மேற்­கொண்­டுள்­ளார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!