சிங்கப்பூருக்கான புதிய இந்தியத் தூதர்

சிங்கப்பூருக்கான புதிய இந்தியத் தூதராக திரு ஜாவீத் அஷ்ரஃப் நியமிக்கப்பட்டுள்ளார். அது தொடர்பான பதவி நியமனப் பத்திரங்களை அவர் நேற்று இஸ்தானாவில் அதிபர் டோனி டான் கெங் யாமிடம் சமர்ப்பித்தார். சிங்கப்பூருக்கான இந்தியத் தூதராக நியமிக்கப்படுவதற்கு முன் திரு ஜாவீத், புதுடெல்லியில் இந்திய வெளியுறவு அமைச்சில் சிறப்புத் திட்டப் பிரிவின் தலைவராகப் பதவி வகித்தார். 1991ல் இந்திய வெளியுறவுச் சேவையில் தமது பணியைத் தொடங்கிய திரு ஜாவீத், பெர் லின், ஃபிராங்ஃபட், காத்மாண்டு, வா‌ஷிங்டன் ஆகிய நகரங்களில் அரசதந்திரப் பணியாற்றினார். பின்னர் பிரதமர் அலுவகத்தில் வெளியுறவு அமைச்சு, தற்காப்பு, தேசிய பாதுகாப்பு மன்றம், விண் வெளி அணுசக்தி ஆகிய விவகா ரங்களைக் கவனித்து வந்தார்.

சிங்கப்பூர் அதிபர் டோனி டான் கெங் யாமிடம் நேற்று தமது பதவி நியமனப் பத்திரங்களைச் சமர்ப்பித்தார் சிங்கப்பூருக்கான புதிய இந்தியத் தூதர் திரு ஜாவீத் அஷ்ரஃப் (இடது). உடன் இருப்பவர் திரு ஜாவீத்தின் துணைவியார் டாக்டர் கஸாலா ஷஹாபுதின். படம்: தொடர்பு, தகவல் அமைச்சு

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!