‘குடிபோதையில்’ சாலைத் தடுப்பை மீறிய ஓட்டுநர்

குடித்துவிட்டு வாகன மோட் டியதாகச் சந்தேகிக்கப்படும் ஒருவர் சிராங்கூன் சாலையில் சாலைத் தடுப்பைமீறி தனது வாகனத்தைச் செலுத்தி விளக் குக் கம்பத்தில் மோதினார். நேற்று முன்தினம் இரவு சுமார் 11 மணிக்கு அந்தச் சம்பவம் நிகழ்ந்தது. வாகனம் மோதி நின்றவுடன் 46 வயது ஓட்டுநர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். ஆனால் நான்கு போலிஸ்காரர்கள் அவரை மடக்கிப் பிடித்தனர். வெள்ளிக்கிழமை இரவு பெட்டெய்ன் சாலையில் தாங் கள் சாலைத் தடுப்பை ஏற் படுத்தியிருந்ததாக போலிசார் உறுதி செய்தனர். ஒரு சந்தேகப் பேர்வழி சாலைத் தடுப்பை மீறி வாக னத்தை விரைவாகச் செலுத்திய தாகவும் ஓவன் சாலை அருகே அரசாங்கச் சொத்துக்கு சேதம் விளைவித்து நின்றதாகவும் போலிஸ் பேச்சாளர் கூறினார்.

விளக்குக் கம்பத்தில் மோதி நிற்கும் கார். படம்: ‌ஷின் மின்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!