மானபங்கம் செய்த மருத்துவரின் தண்டனைக் காலம் அதிகரிப்பு

மலேசியாவைச் சேர்ந்த ஆண் மருத்துவர் ஒருவரை மானபங்கம் செய்த குற்றத்தின் பேரில் ஏற்கெனவே 42 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட அழகியல் மருத்துவ நிபுணரான 51 வயது டான் கோக் லியோங்கின் தண்டனைக் காலம் அதிகரிக்கப்பட்டுள்ளது. டானின் மேல்முறையீட்டை நிராகரித்த நீதிமன்றம், அவரது தண்டனைக் காலத்தை 54 மாதங்களுக்கு உயர்த்தியது. டான் தம்மிடம் சிகிச்சை பெற்ற மலேசிய மருத்துவரை 2013ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5, 6ஆம் தேதிகளில் ஒவேசிஸ் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று அங்குள்ள ஓர் அறையில் அவரை சுயநினைவு இழக்க வைத்து அவரது ஆண் உறுப்பைப் படம் எடுத்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

சந்தேகப்பேர்வழி ஒருவர் தன்னை அவரது சகோதரி என்று கூறி மோசடிச் செயல்களில் ஈடுபட்டு வருவதாக சனிக்கிழமை இரவு தன் ஃபேஸ்புக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் டின் பெய் லிங் பகிர்ந்துகொண்டார். படம்: சாவ் பாவ்

23 Jul 2019

இல்லாத சகோதரர் பெயரில் மோசடி; டின் பெய் லிங் எச்சரிக்கை