பொது இடத்தில் சிறுநீர் கழித்த வேளாண் அமைச்சர்

புதுடெல்லி: மத்திய வேளாண் அமைச்சர் ராதாமோகன் சிங் பொது இடத்தில் உள்ள ஒரு சுவற்றில் சிறுநீர் கழித்ததாகச் சொல்லப்படுவதுடன் அதனைக் காட்டும் புகைப்படங்களும் இணையத்தில் பரவி வருகின்றன. மக்கள் பொது இடங்களைக் கழிப்பறையாகப் பயன்படுத்தக் கூடாது என ‘ஸ்வச் பாரத்’ திட்டத்தின் மூலம் மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. ராதாமோகன் சிங்கின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து இணையத்தில் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. மனீஷ் சிஷோடியா உள்ளிட்ட சில பிரபலங்களும் அரசின் திட்டத்துக்கு எதிராகச் செயல்படு வதாக ராதாமோகன் மீது குற்றஞ்சாட்டி சமூக வலைத் தளங்களில் பதிவிட்டு வருகின் றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

துப்பாக்கி ஏந்திய பாது காவலர்கள் நிற்க வேளாண் அமைச்சர் பொது இடத்தில் சிறுநீர் கழிக்கும் படங்கள் இணையத்தில் பரவுகின்றன. ஷோகைல்அன்வர் பெயரிலான டுவிட்டர் பக்கம்