பாஜக வன்முறையால் சாதிக்க இயலாது: ப.சிதம்பரம்

சென்னை: பொய் குற்றச்சாட்டுகள், மோசடி, போராட்டங்களை ஒடுக்குவது, வன்முறை ஆகியவற்றின் மூலம் தனக்கு வேண்டியவற்றைச் சாதித்துவிடலாம் என பாஜக தலைமை கருதுவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். குஜராத் சென்றிருந்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மீது நடைபெற்ற தாக்குதல் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து அவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், வன்முறை மூலம் காங்கிரஸ் இல்லா பாரதத்தை உருவாக்கிவிடலாம் என்ற பாஜகவின் முயற்சிக்கு ஒருபோதும் வெற்றி கிடைக்காது என ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார். ராகுல் மீதான தாக்குதலை பாஜக தேசியத் தலைமை கண்டிக்காதது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon