செல்ஃபிக்காக ரயில் பெட்டியைக் கொளுத்திய மாணவர்கள்

உலகம் மின்னிலக்கமயமாகி வரும் சூழலில் இளம் தலைமுறை யினர் தங்களைத் தாங்களே படம் எடுத்து அதை மற்றவர்களிடம் காட்டி பெருமைகொள்ளும் போக் கும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவர் கள் இருவர் பின்னணியில் தீ கொழுந்துவிட்டு எரியும் தோற்றத் துடன் ஒரு ‘செல்ஃபி’ எடுக்க விரும்பினர்.

எதை எரித்தால் அப்படி ஒரு பின்னணி கிடைக்கும் என்று ஆராய்ந்த அவர்கள் கடைசியாக ஒரு ரயில் பெட்டியைத் தேர்ந்தெடுத் ததுதான் அதிர்ச்சி தரும் தகவல். மத்தியப் பிரதேசத்தில் உள்ள குவாலியர் நகரிலிருந்து உத்தரப் பிரதேச மாநிலம் பல்ராம்பூர் வரை இயக்கப்படுகிறது சுஷாசன் விரைவு ரயில். இம்மாதம் 4ஆம் தேதி குவா லியர் ரயில் நிலையத்தில் காலியாக நின்றிருந்த அந்த ரயிலின் ஒரு பெட்டி திடீரென தீப்பற்றி எரிந்தது. தீப்பிடித்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்திய ரயில்வே போலிசார், குவாலியரில் உள்ள ஒரு பள்ளியில் படிக்கும் இரு சிறார்களே அதற்குக் கார ணம் என்பதைக் கண்டுபிடித்தனர்.

“ரயில் நிலையத்தில் நிறுவப் பட்டுள்ள கண்காணிப்புப் படக் கருவியில் பதிவான காணொளி யின் துணையுடன் குற்றமிழைத்த அவ்விருவரையும் அடையாளம் கண்டோம். அதையடுத்து அவர் களைக் கைது செய்து விசாரித்த தில் ரயில் பெட்டிக்குத் தீ வைத் ததை அவர்கள் ஒப்புக்கொண்ட னர். பின்னால் தீப்பற்றி எரியும் காட்சியுடன் செல்ஃபி எடுத்து, அதைத் தங்களது சமூக ஊடகப் பக்கங்களில் பதிவேற்றம் செய்து, ‘லைக்’குகள் பெறுவதுதான் அவர் களின் நோக்கம்,” என்று ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் விவரித்ததாக ‘டெக்கான் கிரா னிக்கல்’ இணையத்தளச் செய்தி தெரிவித்தது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon