ரூ.200 நோட்டு ஏடிஎம்மில் கிடைக்காது

புதுடெல்லி: புதியதாக நேற்று வெளியிடப்பட்ட ரூ.200 நோட்டுக்கள் வங்கிகளில் மட்டுமே கிடைக்கும் எனவும் நோட்டின் அளவினால் அது ஏடிஎம்களில் கிடைக்காது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. “சிறிய அளவிலான பணப் புழக்கத்துக்கு இந்த ரூ.200 நோட்டுக்கள் பெரிதும் உதவும். ஏடிஎம் இயந்திரத்தின் தட்டுக்கள் இந்த நோட்டுக்களின் அளவுக்கேற்றவாறு செய்யப்பட்டு, பொருத்தப்பட வேண்டும். அதற்குப் பிறகே ஏடிஎம்களில் ரூ.200 நோட்டுக்கள் கிடைக்கும். இந்தத் தட்டுகளை உருவாக்கும் பணி தொடங்கப்பட்டுவிட்டது,” என மத்திய வங்கியின் ரூபாய் நோட்டு மேம்பாட்டு பிரிவின் காந்தி தெரிவித்துள்ளார்.

Loading...
Load next