கள்ள சிகரெட்: ஆடவரிடமிருந்து $1.5 மி. பறிமுதல் செய்ய உத்தரவு

கள்ள சிகரெட்: ஆடவரிடமிருந்து $1.5 மி. பறிமுதல் செய்ய உத்தரவு தீர்வை கட்டாமல் 307 பெட்டிகளில் சிகரெட்டுகளைப் பதுக்கி வைத்த டான் ஹோக் சுவீ, 68, என்ற ஆடவரிடம் இருந்து $1,575,288.70 தொகையைப் பறிமுதல் செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தக் குற்றத்திற்காக 2013ஆம் ஆண்டில் டானுக்கு ஒன்பது மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மேல்விசாரணையில் கணக்கில் காட்டாத வருமானத்தின் மூலம் டான் சொத்து சேர்த்ததற்கு ஆதாரங்கள் கிடைத்தன என்று போலிசும் சிங்கப்பூர் சுங்கத்துறையும் நேற்று வெளியிட்ட கூட்டறிக்கை தெரிவித்தது.

குற்றவியல் நடவடிக்கைகள் மூலம் டான் சொத்து சேர்த்ததாக நம்பப்படுகிறது. 2009 ஜனவரிக்கும் 2012 ஜூலைக்கும் இடைப்பட்ட காலத்தில் அவர் $875,288.70 மதிப்பிற்கு, கணக்கில் வராத சொத்துகளைச் சேர்த்ததை அதிகாரிகள் உறுதி செய்தனர். அதனைக்கொண்டு 2010ஆம் ஆண்டில் தரைவீடு ஒன்றை அவர் வாங்கியதாகவும் அந்தச் சொத்தின் மதிப்பு கிட்டத்தட்ட $700,000 கூடியிருப்பதாகவும் தெரிவிக்கப் பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!