மு.கருணாநிதி -ஒரு சகாப்தம்

இந்தியாவின் தென்கோடி மாநிலமான தமிழ் நாடு, அந்த மாநிலத்துக்கே தனித்தன்மை வாய்ந்த அரசியலின் அடையாளமாகத் திகழ்ந்துவந்த ஓர் அரிய தலைவரான மு. கருணாநிதியை இழந்துவிட்டது. எழுத்தாளர், கவிஞர், செய்தித்துறையாளர், மேடைப் பேச்சாளர், நாடகக் கலைஞர், திரைப் படக் கலைஞர், அரசியல் கட்சித் தலைவர் என்று பல திறன்கொண்ட திரு கருணாநிதி, தனது எல்லாத் திறமைகளையும் அரசியலுக்கே அர்ப்பணித்து ஐந்து முறை தமிழ்நாட்டின் முதல்வராக ஆட்சிபுரிந்தவர்.

எண்பது ஆண்டு பொதுத் தொண்டு, 60 ஆண்டுகள் தோல்வியே காணாத சட்டமன்ற உறுப்பினர், 50 ஆண்டுகள் அரசியல் கட்சித் தலைவர், 20 ஆண்டுகள் முதல்வர், 94 ஆண்டுகள் ஆயுட்காலம் என்று பல சாதனை களை நிகழ்த்திவிட்டு அவர் சென்று இருக் கிறார்.

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் நேரு முதல் இப்போதைய பிரதமர் மோடி வரை 14 பிரதமர்களோடும் அவர் அரசியல் நடத்தினார். முன்பு ஒருங்கிணைந்து இருந்த தஞ்சை மாவட்டத்தில், திருக்குவளை என்ற குக் கிராமத்தில் 1924, ஜூன் மாதம் 3ஆம் தேதி யில் பிறந்த கருணாநிதி, சிறு வயதிலேயே பட்டுக்கோட்டை அழகிரி என்பவரின் மேடைப் பேச்சைக் கேட்டு, பகுத்தறிவுச் சிந்தனைக்கு வசமாகி, ஈவெரா பெரியாரைத் தலைவராக ஏற்று, சி. என். அண்ணாதுரையை வழிகாட்டி யாக ஆக்கிக்கொண்டு, அவரின் திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஐக்கியமானார்.

ஜாதி பேதமிக்க ஒரு நாட்டில் மிக மிக சாமான்ய குடும்பத்தில் பிறந்த கருணாநிதி, ஏழையாக, ஏட்டுக்கல்வி இல்லாதவராக இருந்தாலும் அண்ணாதுரைக்குப் பிறகு திமுகவில் இருந்த பெரும் பணக்காரர்கள், உயர் வர்க்கத்தினர், மெத்தப் படித்தவர்கள் எல்லாரையும் வென்றார். கட்சிக்குத் தலைவ ராகி, ஆட்சி அதிகாரத்தைப் பல தடவை பெற்றார்.

'மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி' என்ற தீர்மானம், மாநிலத்துக்குத் தனிக்கொடி கோரிக்கை, சுதந்திர நாளன்று மாநில முதல்வர்கள் தேசியக் கொடியை ஏற்று வதற்கான உரிமை, இந்தியாவில் கூட்டணி ஆட்சி, தமிழ்த்தாய் வாழ்த்து ஆகிய அரசியல் சாதனைகளுக்கு அவர் சொந்தக்காரர்.

தமிழ்மொழியைச் செம்மொழியாக்கி உலக மாநாடுகள், வள்ளுவர் கோட்டம், பூம்புகார் கலைக்கூடம், ஆசியாவிலேயே பிரம்மாண்ட நூலகம், 133 அடி வள்ளுவர் சிலை, எல்லா வற்றையும் சாதித்து அழகு பார்த்தவர். சமூக நிதியுடன் பின்னிப்பிணைந்த மாநில வளர்ச்சிக்கு அடிகோலிய கருணாநிதி, உழவர் சந்தை, குக்கிராமங்களுக்கு குட்டி பேருந்துகளைக் கண்டார்.

நாட்டுக்கே முன்னோடியாக 'டைடல்' பார்க் பேட்டைகள், சமத்துவபுரங்கள், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகச் சட்டம், இட ஒதுக்கீடு, குடும்பச் சொத்தில் பெண்களுக்குச் சரிசம உரிமை, திருமண உதவித் திட்டம், அரசு வேலைகளில் 33 விழுக்காடு பெண்களுக்கு, கை ரிக்‌ஷாக்குப் பதில் சைக்கிள் ரிக்‌ஷா, பிச்சைக்காரர்கள், தொழு நோயாளிகள் மறுவாழ்வு முதலான திட்டங்களுக்கு முன்னோடி.

இலவசத் தொலைக்காட்சி போன்ற ஏராள இலவசங்களை வாரி வழங்கினார். "இந்தியாவில் இனிமேல் எந்த ஒரு மாநில முதல்வரும் நான் கொண்டு வந்துள்ள திட்டங்களை விரிவுபடுத்த முடியுமே தவிர புதிய திட்டங்கள் எதையும் அமல்படுத்த இயலாது. அந்த அளவுக்கு தமிழ்நாடு புதிய திட்டங்களைக் கண்டுள்ளது," என்று ஒரு தடவை திரு கருணாநிதி அறிவித்தார்.

என்றாலும் தான் ஏற்றுக்கொண்ட தலைவர் ஈவெரா பெரியாரைப் போலவோ, வழிகாட்டி யாக தான் ஏற்றுக்கொண்ட அண்ணாதுரை யைப் போலவோ இல்லாமல் பெரிய அளவில் ஊழல், வாரிசு அரசியல் போன்ற அவப்பெயர் களுக்கு கருணாநிதி ஆளானார் என்பதையும் மறுக்க முடியாது.

இலங்கை பிரச்சினையிலும் தங்கள் நம்பிக் கையை இழக்கும் அளவுக்கு திரு கருணாநிதி நடந்து கொண்டதாக கணிசமான தமிழர்கள் கருதுகிறார்கள்.

என்றாலும் மொத்தத்தில் தமிழுக்கும் மக்களுக்கும் நாட்டுக்கும் அவர் ஆற்றி இருக்கும் தொண்டுகள்தான் மேலோங்கி நிற்கின்றன.

விடாமுயற்சி, உறுதி, கடும் உழைப்பு, எதையும் தாங்கும் இதயம், வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளும் விவேகம், ராஜ தந்திரம் எல்லாம் இருந்தால் சாமான்யத்திலும் சாமான்யராக இருந்தாலும் எவரும் இமாலய சாதனைகளை நிகழ்த்தலாம் என்பதற்குத் திரு கருணாநிதி ஓர் எடுத்துக்காட்டு. அவர் ஒரு சகாப்தம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!