மனந்தளராமல் போராடியும் தோற்ற இங்கிலாந்து

லண்டன்: நேஷன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியில் ஸ்பெயினுக்கு எதிராக நேற்று அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில் 2=1 எனும் கோல் கணக்கில் இங்கிலாந்து தோல்வியைத் தழுவியது. அண்மையில் நடந்து முடிந்த உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் அரையிறுதி வரை சென்று பாராட்டுகளைப் பெற்றது இங்கிலாந்து.

நேஷன்ஸ் லீக் போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் முனைப்புடன் களமிறங்கிய இங்கிலாந்து வீரர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. ஆட்டத்தின் 11வது நிமிடத்தில் மார்கஸ் ரேஷ்ஃபர்ட் இங்கிலாந்துக்கு நல்லதொரு துவக்கத்தைத் தந்தார். அவர் அனுப்பிய பந்து வலைக்குள் செல்ல, இனி வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையுடன் இருந்தனர் இங்கிலாந்து ரசிகர்கள். ஆனால் இங்கிலாந்தின் முன்னிலை நீடிக்கவில்லை. அடுத்த இரண்டு நிமிடங்களில் ஸ்பெயின் ஆட்டத்தைச் சமன் செய்தது.

ஆட்டத்தின் 32வது நிமிடத்தில் ரோட்ரிகோ ஸ்பெயினின் இரண்டாவது கோலைப் போட்டு இங்கிலாந்து வீரர்களை அதிர்ச்சியில் உறைய வைத்தார். பிற்பாதி ஆட்டத்தில் இங்கிலாந்தின் லியூக் ஷோ காயமடைந்து ஆட்டத்தைவிட்டு வெளியேறினார். மனந்தளராமல் போராடிய இங்கிலாந்து தாக்குதல்களில் தீவிரம் காட்டியது. இங்கிலாந்தின் மிக அருமையான கோல் முயற்சிகளை ஸ்பெயின் கோல்காப்பாளர் டாவிட் டி கியா தடுத்து நிறுத்தியதால் ஸ்பெயின் தப்பியது. ஆட்டம் முடியும் கட்டத்தில் இங்கிலாந்தின் டேனி வெல்பெக் பந்தை வலைக்குள் சேர்த்தார். ஆனால் பந்தைப் பிடிக்க பாய்ந்த டி கியாவை இங்கிலாந்து வீரர் கீழே தள்ளிவிட்டதாகக் கூறிய நடுவர் அந்த கோல் செல்லாது என்று அறிவித்தார். இதன் விளைவாக ஆட்டத்தைச் சமன் செய்ய முடியாமல் இங்கிலாந்து தோல்வியைத் தழுவியது.

ஸ்பெயினின் சோல் நிகுவேஷ் அனுப்பிய பந்து இங்கிலாந்து கோல்காப்பாளர் பிக்ஃபர்ட்டைக் கடந்து வலைக்குள் சென்றது. படம்: இபிஏ=இஎஃப்இ

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!