தமிழக ஆளுநருக்கு அதிகாரமில்லை என்கிறது மத்திய உள்துறை அமைச்சு

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள எழுவரையும் விடுவிக்க ஆளுநருக்கு அதிகாரம் உண்டு என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சு கூறியுள்ளது. கடந்த 27 ஆண்டுகளாக நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன், ஜெயக்குமார், ராபட் பயாஸ், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள் ளனர். இவர்களை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரமுள்ளது என்றும் அந்த அதிகாரத்தை பயன்படுத்தலாம் என்றும் உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தர விட்டுள்ளது.

இந்த உத்தரவின்படி தமிழக அமைச்சரவை 9ஆம் தேதி கூடி ஏழு பேரையும் விடுதலை செய்வது குறித்துத் தீர்மானம் இயற்றியது. இந்தத் தீர்மானம் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் துக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்த நிலையில் சட்ட வல்லு நர்கள் சிலர், ஏழு பேரையும் விடு தலை செய்யக் கோரும் தமிழக அமைச்சரவையின் தீர்மானத்தை நிராகரிக்கும் அதிகாரம் ஆளு நருக்கு இல்லை என்று கருத்துத் தெரிவித்தனர். இந்தச் சூழ்நிலையில் 7 பேரையும் விடுதலை செய்ய ஆளு நருக்கு அதிகாரம் இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சின் அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் எழுவரையும் விடு விப்பதில் மீண்டும் சிக்கல் ஏற் பட்டுள்ளது.

இது குறித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சின் உயர் அதி காரிகள், "ராஜீவ் காந்தி கொலை யில் அனைத்துலகத் தொடர்புகள் உள்ளன. எனவே இவர்களை விடுவிக்கும் முடிவு எடுப்பதற்கு முன்பு மத்திய அரசிடம் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நிச்சயம் கலந்து ஆலோசிக்க வேண்டும். ஏழு பேரையும் விடுதலை செய்ய தமிழக ஆளுநருக்கு அதிகாரம் இல்லை," என்று கூறினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!