தாக்கப்பட்ட கோயில் பக்தர்கள்

மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத் தின் சுபாங் ஜெயாவில் உள்ள இந்து கோயிலுக்குள் 50க்கும் மேற்பட்டோர் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்து பக்தர்களைத் தாக்கினர். இந்தச் சம்பவம் நேற்று அதிகாலை சுமார் 2.30 மணிக்கு நிகழ்ந்தது. கிட்டத்தட்ட 147 ஆண்டுகளாக அப்பகுதியில் இருக்கும் சீஃபீல்ட் ஸ்ரீ மகா முத்து மாரியம்மன் கோயிலை வேறோர் இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று கோயில் இருக்கும் நிலத்தின் உரிமையாளர் ஒன் சிட்டி டெவலெப்மண்ட் நிறு வனம் தெரிவித்திருந்தது. இதற்கு கோயில் நிர்வாகத்தினரும் பக்தர் களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின் றனர். இந்தப் பிரச்சினை நீண்டகால மாகவே இருந்து வருகிறது.

நில உரிமையாளர்கள் கோயிலை இடித்து விடுவார்கள் என்று அஞ்சி பக்தர்கள் இரவு நேரங்களிலும் காவல் பணி யில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படு கிறது. இந்நிலையில், நேற்று அதிகாலை இந்தத் தாக்குதல் சம்பவம் நிகழ்ந்தது. தாக்குதல் நடத்தியோர் கோயிலில் இருந்த பெண்கள் உட்பட மற்ற பக்தர்களிடமும் கத்தியைக் காட்டி மிரட்டியதாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாது, கோயில் கட்டடத்தையும் சிலைகளையும் அவர்கள் சேதப்படுத்தியதாக தி ஸ்டார் நாளிதழ் தெரிவித்தது.

தகவல் அறிந்து மற்ற பகுதி களிலிருந்து பக்தர்கள் பலர் கோயிலுக்கு விரைந்தனர். அதற்கு முன்பு கோயிலுக்குள் அத்துமீறி நுழைந்தவர்கள் அதைப் பூட்டி விட்டனர். அதையும் மீறி பக்தர்கள் சிலர் வேலி மேல் ஏறி கோயிலுக்குள் சென்றதாக மலேசிய ஊடகம் தெரி வித்தது. தாக்குதல் நடத்தியவர் களுக்கும் பக்தர்கள் சிலருக்கும் இடையே கைகலப்பு மூண்டது. இதில் பக்தர்கள் சிலர் கடுமையாக தாக்கப்பட்டு படுகாயம் அடைந் ததாகக் கூறப்படுகிறது. அருகில் இருந்த வாகனங்களுக்குத் தீவைக் கப்பட்டது. இறுதியில் தாக்குதல் காரர்களைப் பக்தர்களே விரட்டியடித் ததாக பிரதமர் அலுவலக அமைச்சர் வேதமூர்த்தி நேற்றைய செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

கோயிலில் வன்முறை வெடித்த காட்சிகளைக் காட்டும் காணொ ளிகள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன. இந்தத் தாக்கு தலுக்கும் தங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று நில உரிமையாளர்கள் தெரிவித்துள் ளனர். இதற்கிடையே தாக்குதல் சம்பவத்துக்கு மலேசியாவின் இந்தியச் சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சட்டமன்ற உறுப்பி னர்களும் கடுமையாகக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!