அதிவேக ரயில் ஒப்பந்தம் கையெழுத்தானது

புத்ராஜெயாவிலிருந்து வில்சன் சைலஸ்

சிங்கப்பூர், மலேசியா ஆகிய இரு நாடுகளுக்கும் பல விதங்களில் நன்மை பயக்கும் அதிவேக ரயில் திட்டத்திற்கான புரிந்துணர்வுக் குறிப்பு மலேசியாவில் நேற்று கையெழுத்தானது. சிங்கப்பூர்- கோலாலம்பூர் இடையிலான இந்த ரயில் சேவை 2026ஆம் ஆண்டிற் குள் செயல்படத் தொடங்கும் என நம்பு வதாக பிரதமர் லீ சியன் லூங் தெரி வித்தார். கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற சிங்கப்பூர்-=மலேசியா வருடாந்திர தலை வர்கள் சந்திப்பின்போது இரு நாட்டுப் பிரதமர்களால் அறிவிக்கப்பட்டது இந்த அதிவேக ரயில் திட்டம். தங்கள் சொந்த நாடுகளில் அதிவேக ரயில் நிலையங்கள், அதன் உள்கட்ட மைப்பு ஆகியவற்றை உருவாக்கிப் பரா மரிப்பதுடன் அவற்றை மேம்படுத்துவ தற்கும் தனித்தனியே பொறுப்பேற்றுக் கொள்ள இரு நாடுகளும் சம்மதித்துள் ளன. இவற்றுக்கு மலேசியாவின் 'மைஹெச்எஸ்ஆர்' குழுவும் சிங்கப்பூரின் நிலப் போக்குவரத்து ஆணையமும் பொறுப்பு வகிக்கும்.

சிங்கப்பூர், கோலாலம்பூர் முனை யங்கள் உட்பட புத்ராஜெயா, சிரம்பான், ஆயர் கெரோ, முவார், பத்து பகாட், இஸ்கந்தர் புத்ரி என இந்த அதிவேக ரயில் சேவை எட்டு நிலையங்களைக் கொண்டிருக்கும். அதிவேக ரயில் சேவை மணிக்கு 300 கிலோமீட்டருக்கும் கூடுதலான வேகத்தில் செல்லும் என எதிர்பார்க்கப் படுவதால் சிங்கப்பூரிலிருந்து கோலா லம்பூருக்குச் செல்வதற்கான நேரம் 90 நிமிடங்களாகக் குறையும். இந்தப் புரிந்துணர்வுக் குறிப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்துவதுடன் பொருளாதாரம், புரிந்துணர்வு, மக்கள் தொடர்பு ஆகிய வற்றை மேம்படுத்துவதாகவும் அமையும் என இரு பிரதமர்களும் தங்கள் உரை களில் குறிப்பிட்டனர்.

அதிவேக ரயில் திட்டத்தைத் தொடர்ந்து மலேசியாவுடன் இவ்வாண்டு இறுதியில் இருதரப்பு உடன்பாட்டில் கையெழுத்திடுவதே அடுத்த கட்டம் என்று பிரதமர் லீ கூறினார். "அதன்பிறகு திட்டங்களை நிறை வேற்றுவது இன்றியமையாதது. இந்த மாபெரும் திட்டத்தைச் சரியாக நிறை வேற்றுவதில் தீவிர கவனம் செலுத்து வோம். அனைத்தும் செவ்வனே நிறை வேறினால் இன்னும் பத்து ஆண்டுகளில் முதல் அதிவேக ரயில் சேவை நடப்பிற்கு வந்துவிடும்," என்றார் திரு லீ.

பிரதமர் லீ சியன் லூங் (இடமிருந்து 2வது), மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக் (வலமிருந்து 2வது) முன்னிலையில் அதிவேக ரயில் திட்ட புரிந்துணர்வுக் குறிப்பில் கையெழுத்திடும் போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் (இடது), மலேசியாவின் பிரதமர் துறை அமைச்சர் அப்துல் ரகுமான் டாலான். இந்த அதிவேக ரயில் சேவை சிங்கப்பூர், கோலாலம்பூர் இடையே மேலும் ஆறு நிலையங்களைக் கொண்டிருக்கும் (வலது படம்). படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், நிலப் போக்குவரத்து ஆணையம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!