சுடச் சுடச் செய்திகள்

நல்லிணக்கம் வளர்க்கும் ரயில்

பிரிவினை வாதம் தலைதூக்கும் இந்தக் காலகட்டத்தில், பிரிட்டன், பிரஸல்ஸ், பிலிப்பீன்ஸ் நாடுகளில் தாக்குதல்கள் நடைபெற்றுள்ள நிலையில் நல்லிணக்கத்தை வலி யுறுத்துவது முக்கியமான இலக்கு என்று நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட் தெரிவித்துள்ளார். ஹாபர்ஃபிரண்ட் எம்ஆர்டி நிலையத்தில் நேற்று நல்லிணக்க ரயிலின் ஓட்டத்தைத் தொடங்கி வைத்து பேசிய அவர், “நமக்கிடை யேயுள்ள வேற்றுமைகள் நம்மைப் பிரித்துவிடுவோ என்று அச்சம் தலைதூக்கும்போது நமது பொது இலக்குகளை நாம் நினைவுறுத்திக் கொள்ள வேண்டும்,” என்றார்.

“அனைவருக்கும் நல்ல வாய்ப்பு களை வழங்கும் இடமாக, நமது அன்புக்குரியவர்களுக்கு சிறந்த வற்றை வழங்கி, நமது வாழ்நாள் விருப்பங்களை அடைய விரும்பும் நாடாக, அமைதி யான இடமாக, உண்மையான நட்பு= அக்கம்பக்க உணர்வில் சிறந்து, வாழ்க்கைப் பாதையிலுள்ள மேடு பள்ளங்களைக் கடக்க உதவும் பரிவும் அன்பும் நிறைந்திருக் கும் நாடாக சிங்கப்பூர் திகழ வேண்டும் என விரும்புகி றோம்,” என்றார் அமைச்சர் ஹெங். தை ஹுவா குவான் அறநெறிச் சங்கம், தேசிய இளையர் மன்றம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் இன, சமய நல்லிணக்கத்தைப் பரப்பும் செய்திகள் அந்த ரயிலில் இடம்பெறச் செய்யப்பட்டுள்ளன. நல்லிணக்க செய்திகளைத் தாங்கிய இந்த ரயில் நல்லிணக்க மாதமாகவும் இளையர் மாதமாகவும் கொண்டாடப்படும் ஜூலை மாதம் முழுவதும் வடக்கு-கிழக்கு வழித் தடத்தில் பயணம் செய்யும்.

நல்லிணக்கச் செய்திகளைத் தாங்கி வலம் வரத் தொடங்கியுள்ள ரயில். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon