ஓராண்டுக்கும் மேலாக நீளும் உக்ரேன் போர் உடனே முடியட்டும்

முரசொலி

உக்ரேன், கிழக்கு ஐரோப்பிய சுதந்திர நாடு. ஐரோப்பாவில் நிலப்பரப்பில் ரஷ்யாவுக்குப் பிறகு அதுதான் ஆகப்பெரிய நாடு. அதன் கிழக்கு, வடகிழக்கில் ரஷ்யா அமைந்து இருக்கிறது.

சோவியத் யூனியனின் உறுப்பு நாடாக 1922ஆம் ஆண்டு முதல் இருந்து வந்த உக்ரேன், 1991ஆம் ஆண்டில் அந்த யூனியன் சிதைந்ததை அடுத்து தனிநாடாக விடுதலை அடைந்தது.

சோவியத் யூனியனில் இருந்து உக்ரேன் உட்பட 14 நாடுகள் பிரிந்தன. இந்த நிலவரம் ரஷ்யாவுக்குக் கவலை தரும் ஒன்றாகவே இருந்து வருகிறது. குறிப்பாக உக்ரேன் தனக்கு எதிராக நேட்டோ அமைப்பில் சேர்ந்துகொண்டுவிடும் என்று ரஷ்யா தொடர்ந்து அஞ்சி வருகிறது.

நேட்டோ என்பது ஐரோப்பா-வடஅமெரிக்கா வைச் சேர்ந்த 30 நாடுகளை உள்ளடக்கிய ஒரு பாதுகாப்பு அமைப்பாகும். நேட்டோவில் உக்­ரேன் சேர்ந்துவிட்­டால் மேற்­கின் ராணுவ பல­மும் வளங்­களும் தன் எல்­லை­யைத் தொட்­டு­வி­டும், தனக்கு ஆபத்து வந்­துவி­டும் என்று ரஷ்யா கணிக்கிறது.

ஆகை­யால் நேட்டோ நாடான அமெ­ரிக்கா வுக்கும் ரஷ்­யா­வுக்கும் இடை­யில் உக்ரேனே முக்­கி­ய­மான பிரச்­சி­னை­யாக இருந்து வரு­கிறது.தன் பாதுகாப்பைக் காரணம் காட்டி உக்­ரே­னின் கிரீமியா தீப­கற்­பத்தை ரஷ்யா முன்பு தன்­னு­டன் இணைத்­துக்கொண்­டது நினைவிருக்கலாம்.

இப்­ப­டியே காலம் ஓடி­வந்த நிலை­யில், இது­வரை காணாத கொரோனா பிடி­யில் வச­மாக சிக்கி அதில் இருந்து மீண்­டு­வர முடி­யா­மல் உல­கம் தத்­த­ளித்­துக்­கொண்டு இருந்த ஒரு நேரத்­தில், அதா­வது 2022 பிப்­ர­வரி 24ஆம் தேதி ரஷ்ய அதி­பர் உக்­ரேன் மீது முழு போரைத் தொடுத்து பெரும் படை­ப­லத்தை அந்த நாட்­டின் உள்ளே அனுப்­பி­னார்.

ரஷ்­யா­வின் செய்கை எதிர்­பார்க்­கப்­பட்ட ஒன்­று­தான் என்­றா­லும் அந்த ஆக்­கி­ர­மிப்பு இடம்­பெற்ற கால­கட்­டம் கார­ண­மாக அது உலகை மேலும் அதிர்ச்­சிக்கு உள்­ளாக்கி பொரு­ளி­யலை இன்­னும் மோச­மாக்­கி­விட்­டது.

கோதுமை, எண்­ணெய் உற்­பத்தி ஏற்­று­ம­தி­யில் உக்­ரேன், ரஷ்யா இரண்­டும் உலக அள­வில் முக்­கி­ய­மா­னவை என்­ப­தால், கிருமி கார­ண­மாக அறு­பட்­டி­ருந்த பொருள், சேவை விநி­யோ­கக் கட்­ட­மைப்பு, போர் கார­ண­மாக மேலும் பாதிக்­கப்­பட்­டது. இன்­ன­மும் அது பழைய நிலைக்­குத் திரும்­பி­ய­பா­டில்லை.

உக்­ரேன் போரில் உக்­ரே­னும் நேட்­டோ­வும் ஒரு பக்­க­மும் ரஷ்யா ஒரு பக்­க­மும் நிற்­கின்றன.

அந்தப் போர் ரஷ்யா மட்­டு­மன்றி உல­கம் எதிர்­பார்த்­த­படி இல்லை என்­ப­து­தான் குறிப்­பிடத்­தக்­கது. வல்­ல­ர­சான ரஷ்­யாவை எதிர்த்து மேற்­கத்­திய நாடு­க­ளின் ஆத­ர­வு­டன் உக்­ரேன் இன்­னமும் தாக்­குப்­பி­டித்து நிற்­பது, உல­கில் உள்ள சிங்­கப்­பூர் உள்­ளிட்ட இதர சிறு நாடு­க­ளுக்­குப் புதிய வகை நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்­தக்­கூ­டி­ய­தாக இருக்­கிறது. தைவா­னும் இதற்கு விதி­வி­லக்­கல்ல.

உக்­ரேன் போரின் ஓராண்­டைக் குறிக்­கும் வகை­யில் அந்த நாட்­டிற்குத் திடீர் வருகை அளித்த அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைடன், உக்ரேனுக்கு மேலும் ராணுவ உத­வி­களும் இதர உத­வி­களும் வழங்­கப்­படும் என்று அறி­வித்ததோடு, ரஷ்­யா­வுக்கு எதி­ரான மேலும் தடை­கள் அம­லா­கும் என்­றும் தெரி­வித்­தார்.

அமெ­ரிக்க அதி­ப­ரின் உக்­ரேன் வரு­கைக்கு அடுத்த நாளன்று ஓர் அறி­விப்பை விடுத்த ரஷ்ய அதி­பர் புட்­டின், நீண்ட நெடுங்­கா­லப் போருக்குத் தன் நாடு தயார் என்று சவால் விடுத்­தார்.

அதோடு, மட்­டு­மன்றி ‘நியூ ஸ்டார்ட்’ என்ற அணு ஆயுதக் கட்­டுப்­பாட்டு உடன்­பாட்­டில் இருந்து ரஷ்யா தற்­கா­லி­க­மாக வில­கத் தயார் என்­பதைக் கோடி­காட்­டும் வகை­யில் புட்­டின் தடா­ல­டி­யாக ஓர் அறி­விப்பும் விடுத்­தார்.

அமெ­ரிக்­கா­வுக்­கும் ரஷ்­யா­வுக்­கும் இடை­யில் ஒன்னே ஒன்னு கண்ணே கண்­ணாக எஞ்சி இருக்­கும் ஒரே ஓர் அணு ஆயுதக் கட்­டுப்­பாட்டு உடன்­பாடு இது­தான். ரஷ்ய அதி­ப­ரின் இந்த அறி­விப்பு கார­ண­மாக அணு ஆயுதப் போட்­டா­போட்டி ஏற்­ப­டக்­கூ­டிய வாய்ப்­பும் தலை­தூக்கி இருக்­கிறது.

இந்த விவ­கா­ரத்­தில் இது­வரை ரஷ்­யாவை நேரடி­யாக குறை சொல்­லாத சீனா, போர் ஓராண்டைக் கடந்­து­விட்­டதை அடுத்து, உக்­ரேன் போரை முடி­வுக்­குக் கொண்­டு­வர வேண்­டும் என்று ஒரு யோச­னையை முன்­வைத்து உள்­ளது.

அந்த யோசனை தொடர்­பில் சீன அதி­பர் ஸி ஜின்­பிங்­கைச் சந்­தித்து பேசத் தயார் என்று உக்­ரேன் அதி­பர் ஸெலன்ஸ்­கி­யும் தெரி­வித்­துள்­ளார்.

உக்­ரே­னில் நடந்து வரும் போரின் முதல் ஆண்­டைப் பார்க்­கும்போது, அந்­தப் போர் எல்லா தரப்­புக்­குமே பேர­ழி­வா­கத்­தான் இருந்து வந்­திருக்­கிறது. கூடிய விரை­வில் வெற்றி பெற்­று­வி­ட­லாம் என்று கணக்குப் போட்டு அதில் தோற்றுவிட்ட ரஷ்ய அதி­ப­ர், உக்­ரே­னுக்கு இந்த அள­வுக்கு மேற்­கத்­திய நாடு­களின் ஆத­ரவு இருக்கும் என்­று எதிர்­பார்த்திருக்கமாட்டார்.

உக்­ரேன் போர், உக்­ரேன் நாட்­டுக்கு உள்ளே நடக்­கிறது. ஆகை­யால் அந்த நாடு பெருத்த உயி­ரு­டற்சேதத்தை எதிர்­நோக்கி வரு­கிறது. அடிப்­படை கட்­ட­மைப்­பு­கள் சீர்­கு­லைந்­து­விட்­டன, தொடர்ந்து சீர்­கு­லைந்து வரு­கின்­றன.

ரஷ்­யா­வுக்­கும் பெருத்த உயி­ரு­டற்சேதத்தை உக்­ரேன் உரு­வாக்கி இருக்­கிறது, உரு­வாக்கி வரு­கிறது. உக்­ரேன் போர் நீடித்­தால் அதன் விளைவாக ரஷ்­யா­வும் நேட்­டோ­வும் நேர­டி­யாக மோதக்­கூ­டிய நிலை ஏற்­பட்­டு­வி­ட­லாம்.

இப்­போ­தைய உல­கில் வல்­ல­ர­சு­க­ளுக்கு இடை­யில் பகி­ரங்க போர் மூண்­டால் அணு ஆயு­தங்­கள் மூலம் எந்த அள­வுக்­குப் பேரழிவுகள் ஏற்­படும் என்­பதை நினைத்துப் பார்க்க முடி­ய­வில்லை.

எந்த ஒரு போரும் ஒரு வெற்­றி­யில் போய் முடி­யும். அல்லது பேச்­சு­வார்த்தை மூலம் தீர்வு காணப்படும். உக்­ரேன் போரின் ஓராண்டு நில­வரத்தைப் பார்க்­கை­யில் ராணுவ படை பலம் மூலம் யாருக்­கும் வெற்றி கிட்­டும் என்று தெரி­ய­வில்லை.

ஆகை­யால், பேச்­சு­வார்த்தை ஒன்­று­தான் வழி என்ற நிலை ஏற்­பட்­டு­விட்­டது.

இதை மன­தில் கொண்டு ரஷ்யா, உக்­ரேன், மேற்கத்திய நாடு­கள், சீனா உள்­ளிட்ட அனைத்து தரப்­பு­களும் செயல்­பட வேண்டும். உக்­ரேனில் அமைதி நிலவ வழி­காண வேண்­டும். இப்போதைய உலகில் உக்ரேனின் அமைதி, காலத்தின் கட்டா யம் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!