காட்டுப் பன்றி பிரச்சினை: விவேகமாக தீர்வு காண்போம்

முரசொலி

இந்த பூமி தோன்றி, அதில் உயி­ரி­னம் பரிணமித்த சம்பவம் எவ்­வ­ளவு ஆண்­டு­களுக்கு முன் நிகழ்ந்து இருக்கும் என்­ப­தைத் துல்­லியமாகக் கணிப்­பது என்­பது கற்­ப­னைக்கு அப்­பாற்­பட்ட ஒன்று.

கோடா­னுகோடி ஆண்­டு­க­ளுக்கு முன் ஏரா­ள­மான உயி­ரி­னங்­கள் பரி­ண­மித்து அழிந்­து­போய் இருக்­கின்­றன. அவற்­றில் விலங்­கு­களும் தாவரங்­களும் உள்­ள­டங்­கும். டைனசோர் போன்ற விலங்கு­கள் இதற்கு எடுத்­துக்­காட்டு.

கால ஓட்­டத்­தில் சுற்­றுச்­சூ­ழ­லில் ஏற்­ப­டக்­கூ­டிய பாதிப்­பு­கள், மாற்­றங்­களை எல்­லாம் சந்தித்து, பற்­பல பரி­ணாம வளர்ச்­சி­க­ளைக் கண்டு, சூழ்நிலைக்கு ஏற்ப தங்களைத் தக­வ­மைத்­துக் கொள்ளும் உயி­ரி­னங்­கள் வழி­வ­ழி­யாக இனப்­பெருக்­கம் செய்து நிலைத்து வாழ்­கின்­றன.

எந்த ஓர் உயி­ரி­ன­மும் தன் அடுத்த வாரிசை உரு­வாக்கி விட்டு மடி­ய­வேண்­டும் என்­பது இயற்கை நியதி. விலங்கு, தாவர வளங்­களை மைய­மாக வைத்துதான் உணவு வட்­டம் செயல்­படு­கிறது. ஓர் உயி­ரி­னத்­தைச் சார்ந்து மற்­றொன்று என்று அந்த வட்­டம் சுழல்­கிறது.

உல­கின் குறிப்­பிட்ட பகு­தி­களில், அந்­தப் பகுதி­யின் இயற்கை சூழல்­க­ளுக்­குப் பொருத்­த­மான குறிப்­பிட்ட உயி­ரி­னங்­கள் வாழ்­கின்­றன.

சில நேரங்­களில் குறிப்­பிட்ட ஓர் உயி­ரி­னம் அள­வுக்கு அதி­க­மாக இனப்­பெ­ருக்­கம் அடைந்து மனித இனத்­திற்­கும் சுற்­றுப்­பு­றத்­திற்­கும் பெரும் பிரச்­சி­னை­களை உரு­வாக்கி விடு­வ­தும் உண்டு.

இப்­ப­டிப்­பட்ட ஒரு செய்­தி­தான் அண்­மை­யில் தலை­காட்­டி­யது. அதா­வது, அடுத்த பத்­தாண்டு காலத்­தில் சிங்­கப்­பூர் முழு­வ­தும் காட்­டுப் பன்­றி­கள் பல்­கிப் பெரு­கி­வி­டக்­கூ­டிய வாய்ப்பு உள்ளது என்ற அந்­தச் செய்தி, சில­ருக்கு மலைப்­பூட்டி இருக்­க­லாம். குழப்­பத்தை ஏற்­ப­டுத்தி இருக்­க­லாம்.

காட்­டுப் பன்­றி­கள், நாட்­டில் தெற்­குக் காட்டுப் பகு­தி­க­ளைத் தவிர, இதர பெரும்­பா­லான பசுமை இடங்­களில் பெருகிவிட்டன, அடுத்த பத்து ஆண்டு­களில் அவை எங்­கும் அதி­க­ரித்­து­விடும் என அண்­மைய ஆய்வு ஒன்று தெரி­வித்துள்­ளது.

சிங்­கப்­பூ­ரைப் பொறுத்­த­வரை, காட்­டுப் பன்­றி­கள் இந்த மண்­ணுக்கே உரிய உயி­ரி­னம். பன்றி ஒவ்­வொன்­றும் 100 கிலோ வரை எடை இருக்­கும். காட்­டுப் பன்றி 20 ஆண்­டு­க­ளுக்­கும் மேற்­பட்ட காலம் உயிர் வாழக்­கூ­டிய உயி­ரி­னம்.

விலங்கு, தாவ­ரம் இரண்­டை­யும் உண்­ணும். என்­றா­லும்­கூட தாவ­ரங்­கள்­தான் அதற்­குப் பிர­தான உணவு. மண்ணைத் நோண்டி கிழங்குகள், தண்­டு­கள், விதை­களைத் தின்னும்.

இளம் செடி­கொ­டி­கள், தண்­டு­கள் போன்ற வற்­றை­யும் மேய்ந்­து­வி­டும். பெண் காட்­டுப்­பன்றி 18 மாதம் ஆனது முதல் இனப்­பெ­ருக்­கம் செய்யும். ஆண்டு ஒன்­றுக்கு நான்கு முதல் ஆறு குட்­டி­கள் போடும்.

சிங்­கப்­பூ­ரில் நிலைமை இப்­ப­டியே போனால் இன்­னும் இரு­பது ஆண்­டு­களில் காட்­டுப்­பன்­றி­கள் இனப்­பெ­ருக்­கம் வேக­மாக அதி­க­ரிக்­கும். பல காட்­டுப் பகு­தி­களை அவை ஆக்­கி­ர­மித்­துக்­கொள்­ளும் வாய்ப்பு இருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

சிங்­கப்­பூ­ரில் காட்­டுப் பன்­றி­கள் பெருக பல கார­ணங்­கள் இருக்­கின்­றன. அவற்­றுக்கு நல்ல உணவு அப­ரி­மி­த­மான அள­வுக்கு அதி­க­மா­கக் கிடைக்­கிறது. காட்­டுப் பன்­றியை வேட்­டை­யாடி கொன்று உண்ணும் வேறு உயி­ரி­னம் இல்லை. நாட்­டில் விலங்கு வேட்­டைக்கு முழு தடை இருக்­கிறது. இவை எல்­லாம் காட்­டுப் பன்­றி­கள் பல்­கிப் பெருக சாதகமாக உள்­ளன.

காட்­டுப் பன்­றி­கள் அள­வுக்கு அதி­க­மா­கப் பெரு­கி­விட்­டால் மனி­தர்­க­ளுக்கு நடை­மு­றைப் பிரச்­சி­னை­கள் மட்­டு­மன்றி சுற்­றுச்­சூ­ழ­லுக்கு கணி­ச­மான அள­வுக்­குப் பாதிப்­பு­கள் ஏற்­ப­டக்­கூடிய வாய்ப்­பு­களும் இருக்­கின்­றன.

இரை தேடு­வது, வசிப்­பி­டத்தை உரு­வாக்கு வது போன்ற காரி­யங்­க­ளால் காட்­டுப் பன்­றி­கள் காடு­க­ளின் இயற்கை இயல்­பு­க­ளையே மாற்றி விடக்­கூ­டி­யவை. உள்­ளூர் மண்­ணில் ெசழித்து வள­ரக்­கூ­டிய இந்த மண்­ணுக்கே சொந்­த­மான சில வகை தாவ­ரங்­கள் அடி­யோடு அழிந்­து­விடக்­கூ­டிய நிலையும் ஏற்­ப­ட­லாம். காட்­டுத் தாவர இனப்­பெ­ருக்க ஆற்­ற­லும் பாதிப்­புக்கு உள்­ளா­கக்­கூ­டும்.

காட்­டுப்­பன்­றி­கள் சில நேரங்­களில் மனி­தர்­கள் வசிக்­கும் பகுதிகளுக்­குள்­ளும் வந்து அவர்­களைத் தாக்­கு­வ­தற்­கும் வாய்ப்­பு­கள் உண்டு.

இப்­ப­டித்­தான் சென்ற ஆண்­டில்­ ஒரு சம்­ப­வம் நிகழ்ந்­தது. ஈசூ­னில் காட்­டுப் பன்றி தாக்­கி­ய­தில் ஒரு மாது அந்நேரம் சுய­நி­னைவை இழந்­தார்.

இயற்கையிலேயே ஏற்­ப­டக்­கூ­டிய ஆப்­பி­ரிக்க கிருமி காய்ச்­சல் போன்ற தொற்­று­கள் கார­ண­மாக காட்­டுப் பன்றி இனம் அழிந்­து­வி­டக்­கூ­டிய ஆபத்­து­ அதி­கம். அந்த தொற்­றின் மரண விகி­தம் 90%க்கும் அதிகம் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

என்­றா­லும்­கூட தப்­பி­வி­டும் பன்­றி­கள் இருக்­க­தான் செய்­யும், அவை பெரு­கத்­தான் செய்­யும்.

ஆனாலும் சிங்­கப்­பூ­ரில் மனி­தர்­களை விரட்டி வெளி­யேற்­றி­வி­டும் அள­வுக்கு காட்­டுப் பன்­றி­கள் பல்­கிப்­பெ­ருகி விஸ்­வ­ரூ­பம் எடுத்­து­வி­டும் என்று அஞ்­சு­வது பொருத்­த­மற்­ற­தாக, தேவை­யற்­ற­தா­கவே இருக்­கும்.

காட்­டுப் பன்­றி­க­ளால் பிரச்­சி­னை­கள் ஏற்படும் என்­றா­லும் அவற்றை விவே­கத்­தா­லும் கட்­டொழுங்­கி­னா­லும் நாம் சமா­ளித்­து­வி­ட­லாம் என்­பதே நடை­முறை உண்மை. தேசிய பூங்காக் கழ­கம் இதை ஏற்­கெ­னவே செய்­து­வ­ரு­கிறது.

சிங்­கப்­பூ­ரில் கூடு­மான அள­வுக்குத் தாவர, விலங்கு வளங்­க­ளைப் பாது­காத்து, சுற்­றுச்­சூ­ழல் வளத்­தைப் பெருக்கி, அதோடு, பாதுகாப்­பான பசு­மைச் சூழ­லில் மக்­கள் வாழ வகை செய்­வதே அதன் குறிக்­கோள்.

இதனால்தான் பன்­றி­க­ளைக் கொல்­வது என்­பது வேறு வழியே இல்­லா­த­பட்­சத்­தில் கடைசி முயற்­சி­யா­கவே மேற்­கொள்­ளப்­ப­டு­கிறது. காட்­டுப் பன்­றி­கள் பிரச்­சி­னை­யைப் பொறுத்­த­வரை சிங்கப்­பூ­ரர்­க­ளுக்­கும் பொறுப்பு இருக்­கிறது. அவர்­கள் பன்­றி­க­ளுக்கு நேர­டி­யா­கவோ மறைமு­க­மா­கவோ உணவு கொடுக்­கக்­கூ­டாது.

காட்­டுப் பன்றி நட­மாட்டப் பகு­தி­க­ளுக்கு அருகே வசிப்­போர், பன்­றி­கள் தோண்ட இய­லாத அள­வுக்­குப் பாது­காப்பு மிக்க வலு­வான அரணை அமைத்­துக்­கொள்­ள­ வேண்­டும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!