2009ல் விடுதலைப் புலிகளுக்கு ஏற்பட்ட கதியே 2023ல் ஹமாஸுக்கும் ஏற்படுமா?

ரவி வெல்லோர்

இணை ஆசிரியர் & மூத்த கட்டுரையாளர்

இந்த நூற்றாண்டு பிறந்தபோது ஹமாஸ், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஆகிய இரு தீவிரவாத அமைப்புகளையும் பற்றி உலகில் பொதுவாக அதிகம் பேசப்பட்டது. அவற்றைக் கையாளுவது பற்றி உலகம் முழுவதும் பல அரசுகள் முக்கியமானதாகக் கருதி விவாதித்து வந்தன.

பார்க்கப்போனால், அந்த இரண்டு அமைப்புகளையும் அதே 1997 அக்டோபர் 8ஆம் தேதியன்றுதான் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகள் என்று அமெரிக்கா வகைப்படுத்தியது.

லெபனானில் செயல்படும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பும் அவ்வாறு வகைப்படுத்தப்பட்டது.

ஹமாஸ் அமைப்பு, காஸாவில் இருந்து அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேலை பயங்கரமாகத் தாக்கியது.

அதற்குப் பதிலாக இஸ்ரேல் அடி கொடுத்து வருகிறது. இந்தச் சூழலில் கடைசியாக விடுதலைப் புலிகள் போன வழியில் ஹமாஸ் அமைப்பும் போகுமா என்ற ஒரு சிந்தனை கிளம்புகிறது.

தற்கொலைப் படை வீராங்கனைகளைக் கண்டுபிடித்த புலிகள் அமைப்பு, தற்கொலைத் தாக்குதலில் உலகத் தலைமை அமைப்பு என்று அப்போது கருதப்பட்டது.

இலங்கை ராணுவம், 2009 நடுப்பகுதியில் புலிகள் அமைப்பின் தலைமைத்துவத்தையும் விடுதலைப் புலிகளையும் வேரோடு துடைத்து ஒழித்தது. அந்த நடவடிக்கையில் ஆயிரக்கணக்கான குடிமக்களும் பலியானார்கள்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனைப் பற்றி எனக்கு (கட்டுரையாளர் ரவி வெல்லோர்) கவலையோ பரிதாபமோ கிடையாது. ஏமாற்றம்தான்.

இன்று ஹமாஸ் இயக்கத்தின் அணுகுமுறையைப் பார்க்கையில், அது மிதவாத தமிழ் அமைப்புகளைப் புலிகள் எப்படி தங்களைவிட குறைவாக எடை போட்டார்களோ அதை ஒத்ததாக இருக்கிறது என்ற எண்ணம் என்(கட்டுரையாளர் ரவி வெல்லோர்) நினைவுக்கு வருகிறது.

புலிகள் அமைப்பைப் போலவே ஹமாஸ் இயக்கத்திலும் கடுமையான கட்டொழுங்கு உண்டு. உறுதியான நோக்கம் உண்டு. அப்போதைக்கு அப்போது உத்திபூர்வமான முறையில் தன்னைச் சரிசெய்துகொள்ளும் ஆற்றலும் அதனிடம் இருக்கிறது.

புலிகள் சில நேரங்களில் கொழும்புடன் நடந்து கொண்டதைப் போலவே ஹமாஸ் அமைப்பும் இஸ்ரேலுடன் தந்திரமாக நடந்துகொண்டதுண்டு.

ஒரு நேரத்தில் பஃதா ஆதிக்கம் செலுத்தும் பாலஸ்தீன நிர்வாகத்தைப் பலவீனப்படுத்துவதற்காக இஸ்ரேல், ஹமாஸ் இயக்கத்தை அனுசரித்து நடந்துகொண்டதும் உண்டு.

புலிகள், ஹமாஸ் இரண்டிலும் நிகழ்ந்தவற்றை வைத்துப் பார்க்கையில் அரசாங்கத் தரப்புகள் விலைமதிப்பில்லா தவற்றைச் செய்து இருக்கின்றன என்றுதான் தெரிகிறது.

காஸா மக்கள் இஸ்ரேலுக்குள் வேலைக்கு வர அனுமதிக்கப்பட்டார்கள். இருந்தாலும்கூட அந்த நடவடிக்கை, இஸ்ரேலை எதிர்க்கவேண்டும் என்ற ஹமாஸ் உறுதியை அசைக்கவில்லை.

புலிகள் தொடர்பில் இலங்கையில் பிரேமதாசாவும் இதேபோன்ற தவறைத்தான் செய்தார்.

1989ல் பதவிக்கு வந்த அவர், முந்தைய அரசு மூலம் இலங்கை வந்திருந்த இந்திய அமைதிப் படையை எதிர்க்கும் வகையில் புலிகளுடன் பேசினார். அந்த அமைப்பிற்கு ஆயுதங்களைக்கூட வழங்கினார்.

புலிகளோ, 1990 மார்ச்சில் இலங்கையைவிட்டு கடைசி இந்திய வீரரும் வெளியானதை அடுத்து, இலங்கை ராணுவத்தைத் தாக்கத் தொடங்கினர். 1993 மே தினப் பேரணியில் தற்கொலைத் தாக்குதல் மூலம் புலிகள் பிரேமதாசாவையே தீர்த்துக் கட்டிவிட்டார்கள்.

புலிகளுக்கு எதிராக 2004ல் நிலவரங்கள் மாறத் தொடங்கின. என்றாலும் புலிகள் கதை முடிய அதற்குப் பிறகு ஐந்து ஆண்டுகள் பிடித்தன.

இப்போதைய இஸ்ரேல்-ஹமாஸ் பிரச்சினையில் பாலஸ்தீனர்கள் தெற்கே சென்றுவிட வேண்டும் என்று இஸ்ரேல் விடுத்த எச்சரிக்கையைப் பெரிதுபடுத்தாமல் தொடர்ந்து காஸாவிலேயே தங்கி இருக்கும்படி ஹமாஸ் அமைப்பு பாலஸ்தீனர்களைக் கேட்டுக்கொண்டது. இதுவும் 2009ல் இலங்கையில் நடந்ததைப் போலவே இருக்கிறது.

புலிகள் அமைப்பின் 1,500 போராளிகளையும் காக்கும் கவசமாக தமிழ் மக்கள் இருக்க வேண்டும் என்று விரும்பிய புலிகள் அமைப்பு, போர் நடக்கும் பகுதிகளை விட்டு தப்பிச்செல்ல முயன்ற தமிழர்களைச் சுட்டது. இலங்கை ராணுவமோ புலிகள், பொதுமக்கள் எல்லாரையும் படுகொலை செய்துவிட்டது.

இலங்கையில் 1990ஆம் ஆண்டில் 600 காவல்துறையினர் ஆயுதங்கள் இன்றி புலிகளிடம் சரண் அடைந்தனர். அவர்களை புலிகள் திட்டமிட்டே சுட்டுக்கொன்றனர். அப்படிச் செய்தால் தமிழர்-சிங்களர் இடையே பகைமை மேலும் கூடும். புலிகள்தான் தங்களைப் பாதுகாக்க முடியும் என்ற எண்ணம் மிதவாத தமிழர்களிடம் ஏற்படும் என்று புலிகள் அமைப்பு கணக்குப் போட்டது.

அதேபோல் ஹமாஸ் இயக்கம் அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து நடத்திய தாக்குதலில் 1,000 பேருக்கும் மேற்பட்ட அப்பாவிகள் கொல்லப்பட்டனர். இந்த நிலையில், ஹமாஸ் தீவிரவாத இயக்கத்தை ஒரு தேசியப் படையாகக் கருதி அதற்கு எதிராக இஸ்ரேல் போர் பிரகடனம் செய்தது ஏமாற்றமாகிவிட்டது.

புலிகள்-ஹமாஸ் இரண்டின் செயல்முறைகளும் ஒத்து இருந்தாலும் இரண்டின் முடிவுகளும் ஒரே மாதிரியாக இருக்கும் என்று கணிப்பது விவேகமானதாக இருக்காது.

விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை அவர்களுக்குப் புவிசார் அரசியல் பாதுகாப்பு இல்லாமல் போய்விட்டது. ஹமாஸ் அமைப்புக்கு அப்படி அல்ல. புலிகளுடன் ஒப்பிடும்போது ஹமாஸ் அமைப்பிடம் அதிக தலைமைத்துவ பலம் இருக்கிறது.

இப்போதைய போர்க்களத்தில் தொடக்கத்தில் இஸ்ரேல் வெற்றி பெற்றாலும் தொடர்ந்து இக்கட்டானநிலை ஏற்படும்.

இஸ்ரேலை அழிப்பது என்ற ஹமாஸ் இயக்கத்தின் நோக்கமும் அனைத்து பாலஸ்தீன எதிர்ப்பை முற்றிலும் அகற்றுவது என்ற இஸ்ரேலின் நோக்கமும் கைகூடாது என்று தெரியும் பட்சத்தில், இந்த முடிவில்லா போராட்டத்தின் நோக்கம்தான் என்னவாக இருக்கும்?

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!