காவல்துறை அதிகாரியாக ‘ரவுடி'களை அடித்து விரட்டும் ஷிகர் தவான்

இந்திய கிரிக்கெட் அணியில் இடம் கிடைக்காத ஷிகர் தவான், 37, தமது கவனத்தை தொலைக்காட்சி பக்கம் திருப்பியுள்ளார். 

இயக்குநர் அபிஷேக் கபூர் இயக்கத்தில் உருவாகியுள்ள தொலைக்காட்சித் தொடர் ‘குந்தலி பாக்யா’. கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதி முதல் ‘ஜீ’ இந்தித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

இதில் ஷிகர் தவான் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில், இந்தத் தொடரில் தனது காட்சியை முடித்துக் கொடுத்த நடிகை அஞ்சும் ஃபஹீ, இயக்குநர் அபிஷேக் கோர், ஷிகர் தவானுடன் இருக்கும் புகைப்படங்களைச் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

இந்தப் புகைப்படங்கள் குறித்து ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். 

ஷிகர் தவானின் காவல்துறை ‘கெட்டப்’ நன்றாக இருப்பதாக சிலர் கூறினாலும், இப்படி நடிப்பதை விட்டுவிட்டு மீண்டும் கிரிக்கெட் அணியில் இடம்பிடிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் மற்ற சிலர் கூறி வருகின்றனர். 

ஷிவர் தவான் காவல்துறை கதாபாத்திரம் தொடர்பான காணொளியை தமது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டு, “விரைவில் புதிய விஷயம் வருகிறது,” என்று பதிவிட்டுள்ளார். 

இதற்கு முன்னதாக ‘டபுள் எக்ஸ்எல்’ என்ற படத்தில் சோனாக்‌ஷி சின்ஹா, ஹூமா குரேஷியுடன் இணைந்து ஷிகர் தவான் நடித்தார்.

2010ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியின் மூலம் ஒரு நாள் போட்டியில் ஷிகர் தவான் அறிமுகமானார். தமது 100வது ஒருநாள் போட்டியில் சதம் அடித்த 9வது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!