உயர் ரக கார்களைத் திருடும் கதாநாயகன், கதாநாயகி

நட்டி நட்ராஜ் தற்போது உலக அழகி ஒருவருடன் சேர்ந்து உயர் ரக கார் களைத் திருடும் வேலைகளைச் செய்து வருகிறார். 'சதுரங்க வேட்டை' படத்திற்குப் பிறகு ஒளிப்பதிவாளர் நட்டிக்குத் தொடர்ந்து சினிமாவில் கதாநாயகனாக நடிப்பதற்கான வாய்ப்புகள் தேடி வருகின்றன. அவற்றுள் தனக்குப் பொருத் தமான கதைகளை மட்டும் தேர்ந் தெடுத்து நடித்து வருகிறார். அந்த வரிசையில் தற்போது 'போங்கு' என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இப்படத்தில் அவருக்கு ஜோடி ரூஹி சிங். இவர் கடந்த 2014ஆம் ஆண்டு உலக அழகியாகத் தேர்ந் தெடுக்கப்பட்டவர். இந்தியில் இரண்டு படங்களில் நடித்திருக்கிறார். இவர்க ளுடன் அதுல் குல்கர்னி, முண்டாசு பட்டி ராம்தாஸ், அர்ஜுன், பாவா லட்சு மணன், மயில்சாமி உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இப்படத்தை தாஜ் என்பவர் இயக்கு கிறார். இவர் இயக்குநர் சாபு சிரிலிடம் உதவியாளராகப் பணியாற்றியவர். இப் படத்தில் நட்டி உயர் ரக கார்களைத் திருடுபவராக நடிக்கிறார். இவருடன் நாயகியும் சேர்ந்து கார் திருடுவாராம். இப்படத்தில் நட்ராஜின் தோற்றம் இதுவரை இல்லாத அளவுக்கு ஸ்டைலாக இருக்குமாம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!