‘யு’ சான்றிதழுடன் 22ஆம் தேதி வெளியாகும் ‘தொடரி’

தணிக்கையில் ‘யு’ சான்றிதழ் கிடைத்ததைத் தொடர்ந்து, செப்டம்பர் 22ஆம் தேதி ‘தொடரி’ வெளியாகும் எனப் படக்குழு அறிவித்திருக்கிறது. பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ், கீர்த்தி சுரேஷ், ஹரிஷ் உத்தமன், சின்னி ஜெயந்த், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘தொடரி’. இமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரித்திருக்கிறது. அண்மையில் ‘இருமுகன்’ திரைப்படம் வியாழக்கிழமை வெளியிடப்பட்டு வசூலை அள்ளியது. அதே பாணியில் இப்படத்தையும் வியாழக்கிழமை அன்று வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

Loading...
Load next