சொந்தமாகக் கட்டும் வீடு: புலம்பித் தீர்த்த அப்புக்குட்டி

அஜித்தின் கடைக்கண் பார்வை பட்ட தும், நல்ல நகைச்சுவை நடிகராகப் பெயரெடுத்துள்ள அப்புக்குட்டியின் மதிப்பு கோடம்பாக்கத்தில் வெகுவாக உயர்ந்து விட்டது. அப்புக்குட்டியை விதவிதமாகப் புகைப்படம் எடுத்துக் கதாநாயகனாக நடிக்க வைக்க வேண்டும் என உற்சாகப்படுத்தியவர் அஜித். அஜித் நடித்த ‘வீரம்’, ‘வேதாளம்’ ஆகிய படங்களில் நடித்தார் அப்புக் குட்டி. இதையடுத்து தற்போது அஜித், சிறுத்தை சிவா இணைந்துள்ள மூன் றாவது படத்திலும் அப்புக்குட்டி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

அஜித்தைப் பற்றி ஒவ்வொரு முறை யும் அப்புக்குட்டி புகழ்ந்து வந்தாலும் தற்போது அஜித் இப்படி பண்ணுவார் என்று எதிர்பார்க்கவில்லை என அவர் வருந்தும் அளவுக்கு ஒரு விஷயம் நடந்துள்ளது. அப்படி என்ன நடந்துவிட்டது? சிறுகச் சிறுகப் பணம் சேமித்து அதைக் கொண்டு ஒரு வீடு கட்டி வருகிறார் அப்புக்குட்டி. முழுக்க முழுக்க அவர் தன் செலவில் சென்னையில் கட்டி வரும் இந்த வீட்டை அஜித்தான் கட்டிக் கொடுக் கிறார் என்று கோடம்பாக்கத்தில் யாரோ தகவல் பரப்பிவிட்டார்களாம். அதுதான் அப்புக்குட்டியின் வருத்தத் துக்குக் காரணம். அதை அண்மையில் நடைபெற்ற நிகழ்வில் வெளிப்படை யாகக் கூறிவிட்டார். ‘காகித கப்பல்’ என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் அப்புக் குட்டி.

இப்படத்தின் பாடல் வெளியீடு அண்மையில் நடந்தது. “நான் சொந்தமாகத்தான் வீடு கட்டுகிறேன். அஜித்சாருக்கும் அதற் கும் எந்தவிதச் சம்பந்தமும் இல்லை. சிலர் அப்படிச் சொல்வது வருத்தம் தருகிறது,” என்றார் அப்புக்குட்டி. இதுகுறித்து அஜித்துக்கும் தகவல் சென்றதாம். உடனே, ‘காகித கப்பல்’ விழா நடந்த சமயத்தில் அப்புக்குட்டி யைத் தொடர்பு கொண்டு வாழ்த்துத் தெரிவித்தாராம். வதந்திகள் குறித்து அலட்டிக் கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தினாராம். அஜித் நேரடியாக வாழ்த்தியது அப்புக்குட்டிக்குப் பெருமையையும் உற்சாகத்தையும் கொடுத்துள்ளது. இப்புதிய படத்தில் அஜித் தன் ரசிகர்களுக்கு அறிவுரை கூறுவது போல் ஒரு பாடல் இடம்பெறுகிறது. மேலும் அப்புக்குட்டிக்கு ஒரு டூயட் பாடலும் உள்ளது. அதில் அப்புக்குட்டி நடனம் ஆடி அசத்தியிருக்கிறாராம்.

‘காகித கப்பல்’ படத்தில் இடம்பெறும் காட்சியில் அப்புக்குட்டி.

இப்பகுதியில் மேலும் செய்திகள்