சிக்கலையும் தாண்டி ரசிகர்களைக் கவர்ந்த ‘ரெமோ’

சிவகார்த்திகேயனின் ‘ரெமோ’ படத்திற்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது பற்றி திரையுலகில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. தமிழில் பெயர் வைக்கப் படும் திரைப்படங்களுக்கு மட்டும் தமிழக அரசு வரி விலக்கு அளிக்கும் என்று அறிவிக்கப்பட்ட பிறகு அனைத்து தமிழ்ப் படங்களின் தலைப்புகளும் ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மாற்றப்பட்டன. அதாவது ‘எஸ்.எம்.எஸ்’ படம் ‘சிவா மனசுல சக்தி’, ‘மாஸ்’ என்கிற பெயர் ‘மாசிலாமணி’ என மாறியது. இந்நிலையில் உதயநிதியின் ‘கெத்து’, ‘மனிதன்’ படங்களுக்கு வரி விலக்கு மறுக்கப்பட்டது.

இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடித்த ‘ரெமோ’ படத்திற்குத் தமிழக அரசு வரிவிலக்கு அளித்துள்ளது. ‘ரெமோ’ தமிழ் வார்த்தை இல்லை, இதற்கு எப்படி வரி விலக்கு அளிக்கப்பட்டது எனத் தமிழ்த் திரைப்பட உலகில் தற்போது சர்ச்சை எழுந்துள்ளது. இதற்கிடையே, ‘ரெமோ’ படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்து உள்ளது. குறிப்பாக, சிவாவின் பெண் வேடத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதுபோல், விஜய் சேதுபதி யின் ‘றெக்க’, பிரபுதேவாவின் ‘தேவி’ ஆகிய படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளன. ஆயுத பூஜையை முன்னிட்டு வெளியான இந்த மூன்று படங்களுக்கும் நல்ல வரவேற்பு இருந்தாலும் எந்தப் படம் வசூலில் முதல் இடத்தைப் பிடிக்கப்போகிறது என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நவீன வசதிகளுடன் கூடிய, 20 ஆயிரம் சதுர அடி பரப்பளவுள்ள ஆடம்பர வீட்டை வாங்கியுள்ளாராம் பிரியங்கா சோப்ரா.  கோப்புப்படம்: ஊடகம்

20 Nov 2019

ரூ.144 கோடிக்கு வீடு வாங்கிய பிரியங்கா சோப்ரா

‘ஆஹா கல்யாணம்’ என்ற படத்தில் நானியுடன் இணைந்து நடித்த வாணிகபூர். படம்: ஊடகம்

20 Nov 2019

கவர்ச்சி படத்தால் சிக்கலில் சிக்கிய வாணி கபூர்