அனிருத் இசையில் உருவாகும் முதல் திகில் படம் ‘ரம்’

இசையமைப்பாளர் அனிருத்தின் உறவு வழி சகோதரர் ரி‌ஷிகேஷ் நாயகனாக நடிக்கும் படம் 'ரம்'. இப்படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்குபவர் சாய் பரத். "முதலில் இப்படத்திற்கு 'தீர்ப்பு' என்று தலைப்பிட்டிருந்தேன். இது சின்னத்திரை தலைப்பாக இருப்பதாக என் நெருக்கமானவர்கள் விமர்சனம் செய்தனர். இதில் நகைச்சுவை, அதிரடி, திகில் எல்லாம் கலந்திருப்பதால் முதலில் தலைப்பை மாற்ற வேண்டும் என்று இந்தக் கதையைக் கேட்டபின் என் நண்பர்கள் கூறினார்கள். "தீர்ப்பு என்றால் பண்டைய காலத்தில் 'ரம்' எனப் பொருளாம். இதற்கு ஆதாரங்களும் உள்ளன.

படக்குழுவினருடன் கலந்து பேசி இறுதியாக இப்படத்திற்கு 'ரம்' எனத் தலைப்பு வைத்துவிட்டோம். "படத்தின் கதையைத் தயாரிப்பாளர் விஜயராகவேந்திரா, அனிருத்திடமும் கூறினேன். 'ரம்' என்ற தலைப்பையும் கூறினேன். பொருத்தமாக இருப்பதாக அனைவரும் பாராட்டினார்கள். இதே பாராட்டு ரசிகர்களிடம் இருந்து கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன். "வெளி உலகத்துக்குத் தெரியாமல் திருடர்களாக இருக்கும் ஐந்து பேர் ஒருமுறை கொள்ளையடிக்கும்போது காவல்துறையினரிடம் மாட்டிக் கொள்கிறார்கள். அதற்குப் பிறகு அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளில் அமானுஷ்யமும் கலந்திருக்கிறது.

'ரம்' படத்தில் இடம்பெறும் காட்சியில் ரி‌ஷிகேஷ், சஞ்சிதா ஷெட்டி.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!