காஜல்: சுயத்தை கேலி செய்தால் ‘ருத்ரகாளி’ ஆகிவிடுவேன்

தைரியமான பெண்ணான என் னையும் ஒருசிலர் சீண்டிப் பார்த் துள்ளனர். அப்படி ஒருசில சம யங்களில் என் சுயமரியாதை யையோ,  மற்றவர்களை கேலி செய்வதையோ பொறுக்கமுடியாமல் கோபத்தில் நான் ருத்ர காளியாக மாறியுள்ளேன் என்று தனது திரை வாழ்க்கை குறித்து ஊடகங் களிடம் மனம்திறந்துள்ளார் காஜல் அகர்வால்.
“நான் நடித்துள்ள ‘பாரிஸ் பாரிஸ்’ படம் விரைவில் வெளியீடு காண உள்ளது. கமல்ஹாசனுடன் ‘இந்தியன் 2’ஆம் பாகத்தில் நடித்துவருகிறேன். 
 “நான் நாயகியாகி 10 ஆண்டு களாகின்றன. வடஇந்தியாவில் இருந்து வந்த என்னையும் ஒரு தமிழ்ப் பெண்ணாகவே ரசிகர்கள் மதித்து வருகின்றனர். வாய்ப்பின்றி பின்தங்கி போய்விடுவோமோ என்று நான் ஒரு போதும் அச்சம் கொண்டதில்லை. 
“என் திருமணத்தை அவசர அவசரமாக இப்போதே நான் செய்துகொள்ள விரும்பவில்லை. கொஞ்சம் காலம் போகட்டும். மன துக்கு பிடித்த இளைஞரை  காதலித்து திருமணம் செய்வேன். அப்படி ஒரு வேளை காதல் கைகூடாமல் போனால், பெற்றோர் பார்க்கும் மாப்பிள் ளையை மணம் முடிப்பேன். 
“இதுவரை தரமான படங் களில்தான் நடித்துள்ளேன். 
“ஒருமுறை என் தோழியிடம் ஒருவன் தவறாக நடக்கமுயன்ற தைக் கண்ட நான், அவன் சட்டைக் காலரைப் பிடித்து இழுத்து, முகம் வீங்கிப் போகும் அளவுக்கு அடித்துச் சாத்தினேன்.
“இருப்பினும் சினிமாவில் எந்த ஒரு கசப்பான அனுபவங்களையும் நான் சந்திக்கவில்லை. தங்களைத் தவறாக அணுகியவர்கள் பற்றி சில பெண்கள் ‘மீடூ’வில் பேசுகி றார்கள். அவர்கள் பொய்சொல்ல மாட்டார்கள். ஆனால் எனக்கு அது மாதிரியான அனுபவம் ஏற்பட வில்லை. சினிமா மட்டுமின்றி எல்லா துறைகளிலும் மோசமான மனிதர்கள் உள்ளனர். பெண்கள் எப்போதும் விழிப்போடு இருக்க வேண்டும். என்னைப் பாதுகாத்துக்கொள்ள எனக்குத் தெரியும்,” என்கிறார் காஜல்.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்