குத்தாட்டம் ஆடவில்லை என்கிறார் அதா

ஒரே ஒரு பாடலுக்காக குத்தாட்டம் போட்டிருப்பதாக அண்மையில் வெளியான தகவலில் உண்மையில்லை என்கிறார் இளம் நாயகி அதா சர்மா. 
இத்தகைய வதந்திகளை ரசிகர் கள் நம்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
“தற்போது எந்தவொரு படத்திற்கும் ஒரே ஒரு பாட லுக்காக குத்தாட்டம் போட ஒப் பந்தமாகவில்லை. இதற்காக அதிக சம்பளம் வாங்கியதாகக் கூறப்படுவதும் தவறு. ஒரு வேளைஅப்படியொரு வாய்ப்பு அமைந்து நானும் ஆடுவதற்கு ஒப்புக்கொண்டால் அதுகுறித்து நிச்சயம் தகவல் பகிர்வேன்,” என்று சொல்லும் அதா சர்மா, பொதுவாக இத்தகைய வதந்திகளைத் தாம் கண்டுகொள்வதில்லை என்கிறார். 
பொய்யான தகவல்களை ஒதுக்கிவிட்டால் அவை தன்னால் அடங்கி விடும் என்பதே அதாவின் கணக்கு. ‘இது நம்ம ஆளு’ படத்தில் சிம்புவுடன் ஜோடி சேர்ந்து நடித்த இவர், அண்மையில் வெளியான ‘சார்லி சாப்ளின்-2’ படத்தில் பிரபுதேவாவுடன் இணைந்து நடித்தார். 
இதையடுத்து மூன்று இந்திப் படங்களில் நடித்து வருகிறாராம்.