(காணொளி): பிரபலமான ‘சூப்பர் சிங்கர்’ தம்பதி தமிழ் முரசுடன் பிரத்தியேக நேர்காணல்

‘சூப்பர் சிங்கர்’ புகழ் செந்தில் கணேஷ், ராஜலட்சுமி தம்பதியை தமிழ் முரசு சிறப்பு பேட்டி கண்டது. 

எதிர்வரும் தைப்பொங்கல் கொண்டாட்டங்களை முன்னிட்டு ‘பொங்கலோ பொங்கல்’ என்ற பாடலைப் பாடியுள்ளனர் இத்தம்பதி. 

“தமிழர் பெருமைகளை எடுத்துக்கூறும் வகையில் அமைந்துள்ள இப்பாடல், நிச்சயமாகப் பொங்கல் விழாக்காலத்துடன் மற்ற நாட்களிலும் கேட்கக்கூடிய ஒரு பாடலாக இருக்கும்,” என்றார் திரு செந்தில். 

“சிங்கப்பூரில் வெளியிடப்பட்டுள்ள இப்பாடல், உலகத்திலுள்ள அனைத்து தமிழர்களும் ரசித்து பாடக்கூடிய ஒரு பாடல்,” என்றார் திருமதி ராஜலட்சுமி.  

சிங்கப்பூர் நிறுவனமான ‘லோகன் எண்டர்பிரைசஸ்’, இந்திய நிறுவனமான ‘நம்பிராஜன் இண்டர்நேஷனல் சினிமாஸ்’ இணைந்து வழங்கியுள்ள இப்பாடலுக்கு திரு ஷர்வன் இசையமைத்துள்ளார். பாடலாசிரியர் திரு வடிவரசு.

‘குட்டே இம்பெக்ஸ்’ நிறுவனத்தின் ஏற்பாட்டில் சிங்கப்பூரில் இந்த பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon