பொங்கோல் தங்குவிடுதியில் பொங்கல் குதூகலம், உற்சாகம்

கொவிட்-19 சூழ­லால் வழக்­கம்­போல பொங்­கல் பண்­டி­கை­யைக் கொண்­டாட முடி­யாத நிலை­யில் வெளி­நாட்டு ஊழி­யர்­கள் உள்­ள­னர். ஆனால் இத்­த­கைய சூழ­லி­லும் அவர்­க­ளுக்கு பொங்­கல் கொண்­டாட்ட உணர்­வைப் பரப்­பும் பொருட்டு, பொங்­கோல் பகு­தி­யில் அமைந்­துள்ள எஸ்11 ஊழி­யர் தங்கு விடுதி நிர்­வா­கம், அங்கு வசிக்கும் ஏறத்­தாழ 1,000 ஊழி­யர்­களுக்கு பொங்­கல் திரு­நா­ளன்று சிறப்பு உண­வுப் பொட்­ட­லங்­களை வழங்கி மகிழ்­வித்­தது. சர்க்­க­ரைப் பொங்­கல், சாதம், சாம்­பார் அடங்­கிய உண­வுப் பொட்­ட­லங்­கள் ஊழி­யர்­களுக்கு விநி­யோ­கிக்­கப்­பட்­டன.

தங்­குவிடு­தி­யில் வசிப்­ப­வர்­களுக்­காக செய்­யப்­பட்ட ஏற்­பா­டு­களை எண்ணி தாம் பெரு­மி­தம் கொள்­வ­தாக கட்­டு­மா­னத் துறை ஊழி­யர் திரு மணி­வேல் மாரி­முத்து, 40, கூறி­னார். கடந்த 18 ஆண்டு­களாக அவர் சிங்­கப்­பூ­ரில் பணி­யாற்றி வரு­கி­றார்.

“எஸ்11 தங்குவிடு­தி­யில் உள்ள திரை­ய­ரங்­கில் இவ்­வா­ரம் இரண்டு திரைப்­ப­டங்­க­ளைக் கண்டு மகிழ்ந்­தேன். விஜய்யின் ‘மாஸ்­டர்’, சிம்பு வின் ‘ஈஸ்­வ­ரன்’ ஆகி­யவை அவை.

“கொவிட்-19 சூழ­லி­லும் பாது­காப்பு விதி­மு­றை­க­ளுக்கு இணங்­கும் அதே­வே­ளை­யில், ஊழி­யர்­களுக்கு இது­போன்ற பொழு­து­போக்கு அம்­சங்­களை ஏற்­பாடு செய்­தி­ருப்­பது மகிழ்ச்சி தரு­கிறது. பொங்­கல் தினத்­தன்று ஊழி­யர்­களுக்கு உண­வ­ளித்து அவர்­களை மகிழ்ச்­சிப்­ப­டுத்­தி­யது மற்­றொரு சிறப்பு,” என்­றார் திரு மணி­வேல்.

இவ்­வாண்டு நோய்த்­தொற்று நில­வ­ரம் முடி­வுக்கு வந்து எல்­லா­ரும் மகிழ்ச்­சி­யாக இருக்க வேண்­டும் என்­றும் தாம் பிரார்த்­திப்­ப­தாக கட்­டு­மா­னத் துறை ஊழி­யர் திரு ராமன் சுந்­த­ரம், 40, சொன்­னார்.

“கடந்த சில ஆண்­டு­களில் பொங்­கல் அன்று சக ஊழி­யர்­களுடன் சேர்ந்து கோயி­லுக்­குச் செல்­வேன். தங்­குவிடுதி அறை­யிலேயே பொங்­கல் சமைத்து, கடவு­ளுக்­குப் படை­யல் வைத்து, உணவை வெளியே எடுத்­துச் சென்று சாப்­பி­டு­வோம். எளி­மை­யாக கொண்­டா­டி­னா­லும் மனம் நிறை­வாக இருக்­கும். கோயி­லுக்கு மறு­ப­டி­யும் போக மனம் ஏங்­கு­கிறது,” என்­றார் அவர்.

கட்­டு­மானத் துறை ஊழி­யர் திரு ராம­சாமி சுரேஷ், தமக்கு வாய்ப்பு கிடைத்­தால் சொந்த ஊரான காரைக்­கு­டிக்­குச் செல்ல விரும்பு­வதா­கக் கூறி­னார்.

“சென்ற ஆண்டு மார்ச் மாதம் ஊருக்­குச் சென்று வந்­தேன். நான் ஊருக்­குச் சென்­றது அதுவே கடைசி. ஊரில் குடும்­பத்­து­டன் சேர்ந்து பொங்­கல் கொண்­டா­டும் அனு­ப­வம் வேறு. குடும்­பத்­தைக் காண மனம் ஏங்­கு­கிறது. நோய்த்­தொற்று நில­வ­ரம் சரி­யா­கி­ய­வு­டன் நான் ஊருக்­குச் செல்ல காத்­து இ­ருக்­கி­றேன். இதற்­கி­டையே, பொங்­கல் அன்று எஸ்11 விடுதி எங்­க­ளுக்­காக சிறந்த முறை­யில் ஏற்­பாடு­க­ளைச் செய்­துள்­ளது,” என்­றார் சுரேஷ்.

‘கைண்ட்ஸ் ஃபேமளி அசோ­சி­யே­ஷன்’ என்று அழைக்­கப்­படும் ஒரு சங்­கம், ஊழி­யர்­க­ளுக்கு உணவுப் பொட்­ட­லங்­களை வழங்­கி­யது. ஏறத்­தாழ 200 குடும்­பங்­களைக் கொண்ட இந்­தச் சங்­கம் 10 ஆண்டு­க­ளாக இயங்­கு­கிறது. வழக்­க­மாக பொங்­க­லுக்கு அண்டை நாடு­க­ளுக்­குச் செல்­வது அல்­லது உள்­ளூ­ரி­லேயே ஒன்­று­கூ­டல் நிகழ்ச்­சி­களை நடத்­தும் இந்த அமைப்பு இம்­முறை சமூ­கத் தொண்டு ஆற்ற முடி­வெ­டுத்­துள்­ளது என்­றார் சங்கத்­தின் தலை­வர் திரு கலை­ய­ரசு தொண்­டை­மான், 51.

“எங்­க­ளது சங்க உறுப்­பி­னர்­கள் கலந்­து­ரை­யாடி இவ்­வாண்டு பொங்­கல் அன்று வெளி­நாட்டு ஊழி­யர்­களுக்கு உதவ வேண்­டும் என்று முடிவு செய்­த­னர். அனை­வ­ரும் இந்த முயற்­சிக்கு கைகொ­டுத்து வெற்­றி­க­ர­மாக செயல்­பட ஆத­ர­வு அளித்­த­னர்,” என்­றார் திரு கலை­யரசு.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!