வருமான இடைவெளி குறித்த கலந்துரையாடல்

சிங்­கப்­பூ­ரில் ஆண்­க­ளைக் காட்­டிலும் பெண்­க­ளின் வரு­மா­னம் 6% குறை­வாக இருப்­பதை 2018ஆம் ஆண்டு மனி­த­வள அமைச்சு ஆய்வு ஒன்று கூறி­யுள்­ளது.

“சிங்­கப்­பூ­ரில் ஆண், பெண் அனை­வ­ரும் சம­மான கல்­வி­யைப் பெறு­கி­றார்­கள். ஒரு வேலைக்­குத் தகு­தி­யா­ன­வரா என்ற மதிப்­பீ­டும் சமம்­தான். ஆண், பெண் இரு­வரும் சம­மா­கச் செய்­யும் வேலைக்­குச் சம்­ப­ளத்­தில் வேறு­பாடு இருப்­பது அவ­சி­ய­மும் இல்லை சரி­யா­ன­தும் இல்லை,” என்­றார் லிட்­டில் இந்­தியா வர்த்­த­கர்­கள், மர­பு­டை­மைச் சங்­கத்­தின் (லிஷா) பெண்­கள் பிரிவு தலை­வ­ரான ஜாய்ஸ் கிங்ஸ்லி.

ஆண், பெண் பாலின அடை­யா­ளங்­க­ளுக்கு இடை­யி­லான வரு­மான ஏற்ற இறக்­கம் குறித்து இம்­மா­தம் 5ஆம் தேதி லிஷா பெண்­கள் பிரி­வின் ஏற்­பாட்­டில் நேர­டிக் கலந்­து­ரை­யா­டல் நிகழ்ச்சி நடந்­தது. நிகழ்ச்­சி­யின் நேரலை காணொளி, லிஷா பெண்­கள் பிரி­வின் ஃபேஸ்புக் பக்­கத்­தி­லும் ஒளி­ப­ரப்­பா­னது. சிறப்பு விருந்­தி­ன­ராக மீடி­யா­கார்ப் நிறு­வனத்­தின் இந்­தி­யர் ரசி­கர்­கள் பிரி­வின் தலை­வ­ரான சபா­னித்தா சண்­மு­க­சுந்­த­ரம் இடம்­பெற்­றார்.

‘டயா­ஜியோ’ (Diageo) நிறு­வனத்­தில் அனைத்­து­லக ரீதியில் ‘பிராண்ட் மேனே­ஜ­ரா­கப்’ பணி­யாற்­றும் ஜெய­சுதா சமுத்­தி­ரன் கலந்­து­ரை­யா­டலை வழி­ந­டத்­தி­னார்.

சிங்­கப்­பூர் இந்­திய வர்த்­தக, தொழிற்­ச­பை­யின் பெண்­கள் பிரிவு (SHE@SICCI) தலை­வர் ஷோபா செரிங் பாலா, சிங்­கப்­பூர் இந்­திய வர்த்­தக, தொழிற்­ச­பை­யின் பெண்­கள் பிரிவு (DEWI@SMCCI) குழு உறுப்­பி­னர் ஹூடா ஹாமிட், சிங்­கப்­பூ­ரின் அனைத்­து­லக வர்த்­தக, தொழில் பெண்­கள் சம்­மே­ள­னத் தலை­வர் ஆனி சான் ஆகி­யோர் கலந்­து­ரை­யா­டல் குழு­வில் இடம்­பெற்­ற­னர்.

பெண்­கள் முன்­னேற்­றம் குறித்து பல அம்­சங்­கள் இருந்­தா­லும் குறிப்­பாக வரு­மான வேறு­பாட்­டைத் தலைப்­பா­கத் தேர்ந்­தெ­டுத்து அதை உன்­னிப்­பாக ஆராய ஏற்­பாட்டு குழு முடி­வெ­டுத்­தது என்று குறிப்­பிட்­டார் ஜோயிஸ். சமூ­கத்­தின் பல­வித பிரி­வு­களில் முத்­திரை பதித்து வரும் பெண்­க­ளைக் கலந்­து­ரை­யா­ட­லில் உள்­ள­டக்­கும் நோக்­கத்­தில் குழு பங்­கேற்­பா­ளர்­கள் தேர்வு செய்­யப்­பட்­ட­தா­க­வும் கூறி­னார் அவர். சிங்­கப்­பூ­ரில் பாலின அடிப்­படை­யில் வரு­மான வேறு­பாடு இருந்­தா­லும் அது பல நாடு­க­ளு­டன் ஒப்­பி­டு­கை­யில் குறைவு என்­றும் பாலின அடை­யா­ளத்­தை­விட ஓர் ஊழி­ய­ரது திறன்­க­ளின் முக்­கி­யத்­து­வத்­தைச் சமூ­கம் அறிந்து வரு­கிறது என்­றும் சொன்­னார் ஹூடா.

பெண்­க­ளை­விட ஆண்­கள் அதி­க­மாக வரு­மா­னம் ஈட்­டும் நிறு­வ­னங்­களும் வேலை­களும் நியா­யப்­ப­டுத்­தக்­கூ­டி­யதா என்று ஜெய­சுதா கேட்ட கேள்­விக்கு ஷோபா, “உடல் சார்ந்த பலத்­தால் ஒரு சில துறை­களில் பெண்­க­ளை­விட ஆண்­கள் கூடு­தல் ஆற்­ற­லு­டன் பணி­புரி­யக்­கூ­டும். அதை முற்­றி­லும் நிரா­க­ரிக்க முடி­யாது,” என்­றார்.

இருப்­பி­னும் தொழில்­நுட்ப வளர்ச்சி கண்­டுள்ள இக்­கா­ல­கட்­டத்­தில் அறி­வாற்­ற­லும் சிந்­த­னைத் திற­னும் முதன்­மை­யா­கத் தேவைப்­படும் பல துறை­களில் வரு­மான வேறு­பாட்­டிற்கு அவ­சி­யம் இல்லை என்­பதை வலி­யு­றுத்­தி­னார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!