தேசிய நூலக வாரியத்தின் கண்காட்சியில் 150க்கும் மேற்பட்ட ஆவணங்கள்

மரம் நடு­வ­தற்­கென சிங்­கப்­பூ­ரில் ஒரு தினம் அனு­ச­ரிக்­கப்­ப­டு­கிறது. பூங்கா நகர் திட்­டத்­தின்­கீழ் 1971ஆம் ஆண்டு நவம்­பர் 7ஆம் தேதி­யன்று முதன்­மு­த­லில் இந்த தினம் அனு­ச­ரிக்­கப்­ப­டத் தொடங்­கி­யது. இது­போன்ற தக­வல்­க­ளைப் பகி­ரும் வகை­யில் 19ஆம் நூற்­றாண்டு முதல் 20ஆம் நூற்­றாண்டு வரை சிங்­கப்­பூ­ரின் சுற்­றுச்­சூ­ழல் வர­லாற்­றைக் கூறும் கண்­காட்சி ஒன்று நடை­பெற்று வரு­கிறது.

புத்­த­கங்­கள், வரைப்­ப­டங்­கள், விளக்­கப்­ப­டங்­கள், கையெ­ழுத்­துப் பிர­தி­கள் என 150க்கும் மேற்­பட்ட ஆவ­ணங்­க­ளைப் பொது­மக்­கள் இல­வ­ச­மாக இக்­கண்­காட்­சி­யில் காண­லாம்.

தேசிய நூல­கத்­தில் அமைந்­திருக்­கும் ‘மனி­தன் x இயற்கை : சிங்­கப்­பூ­ரின் சுற்­றுச்­சூ­ழல் வர­லாற்று’ கண்­காட்சி செப்­டம்­பர் மாதம் 26ஆம் தேதி வரை நடை­பெ­றும்.

மனி­த­னுக்­கும் இயற்­கைக்­கும் இடை­யி­லான உற­வைச் சித்­தி­ரிக்­கும் வண்­ணம் ஆவ­ணங்­கள் கண்­காட்­சி­யில் வைக்­கப்­பட்­டுள்­ளன. மேலும், ஒரு சில ஆவ­ணங்­கள் முதல்­மு­றை­யாக பொது­மக்­க­ளின் பார்­வைக்கு வைக்­கப்­ப­டு­கின்­றன என்று கூறி­னார் தேசிய நூலக வாரி­யத்­தின் மூத்த நூலக அதி­காரி (அரும்­பொ­ருள்­கள்) திரு­மதி மகேஸ்­வரி பெரி­ய­சாமி, 51.

“இது­வரை நடை­பெற்ற கண்­காட்­சி­கள் பெரும்­பா­லும் தேசிய நூல­கத்­தின் ஆவ­ணங்­க­ளைக் கொண்­டி­ருந்­தன. ஆனால் இந்த கண்­காட்சி, பல்­லு­யிர்­களை மைய­மா­கக் கொண்­டி­ருப்­ப­தால் லீ கொங் சியன் இயற்கை வர­லாற்று அரும்­பொ­ரு­ள­கம் போன்ற பல அமைப்பு­களி­ட­மி­ருந்து இர­வல் பெற்­றுக்­கொண்ட பொருட்­கள் இக்­கண்­காட்­சி­யில் இடம்­பெ­று­கின்­றன. இதுவே இந்­தக் கண்­காட்­சி­யின் சிறப்பு அம்­சம்,” என்­றார் 25 ஆண்­டு­க­ளுக்­கும் மேலாக நூல­கத்­தில் பணி­யாற்­றும் திரு­மதி மகேஸ்­வரி.

சிங்­கப்­பூர் தேசிய ஆவ­ணக் காப்­ப­கம், சிங்­கப்­பூர் பூமலை ஆகிய அமைப்­பு­க­ளின் இணை ஆத­ர­வில் கண்­காட்சி வழங்­கப்­ப­டு­கிறது.

பிரிட்­டிஷ் ஆட்­சிக்கு முன் சிங்­கப்­பூ­ரின் நிலத்­தோற்­றம், சிங்­கப்­பூர் இந்­தி­யர்­க­ளின் ஆரம்­ப­கால வர­லாறு ஆகி­ய­வற்­றைப் பற்றி அறி­வதற்கு இக்­கண்­காட்சி பேரு­த­வி­யாக இருக்­கும் என்­றார் சிங்­கப்­பூர் ஊர்­வன விலங்கு சங்­கத்­தின் இணை நிறு­வ­னர் திரு சங்­கர் அனந்­த­நா­ரா­ய­ணன், 26.

“இளை­யர்­கள் கண்­டிப்­பாக பய­ன­டை­வார்­கள். நானே கல்­வித் துறை­யில் பணி­யாற்­று­வ­தால் நிச்­ச­ய­மாக என் மாண­வர்­க­ளைக் கண்­காட்­சிக்கு அழைத்து வரு­வேன். அறி­யா­மை­யில் இருக்­கக்­கூ­டாது. இது­போன்ற தக­வல்­களை அறிந்­தி­ருக்­க­வேண்­டும்.

“சிங்­கப்­பூரை ஒரு நக­ரப் பகு­தி­யா­கத்­தான் பல­ரும் அறிந்­தி­ருப்­பர். ஆனால் நக­ரம் ஆவ­தற்கு முன்­னர் என்ன இருந்­தது என்­பது குறித்து அறி­யா­மையே உள்­ளது. இத­னால்­தான் இயற்­கை­யு­டன் நமது தொடர்பு முறிந்­தி­ருக்­கிறது. அத­னால்­தான் வன உயி­ரி­னங்­க­ளு­டன் மனி­தர்­கள் ஒத்­து­வாழ்­வ­தில் சிக்­கல் ஏற்­ப­டு­கிறது,” என்று விளக்­கி­னார் சங்­கர்.

‘இயற்­கை­யைப் புரிந்­து­கொள்­ளு­தல்’, ‘இயற்கை வளங்­க­ளைப் பயன்­ப­டுத்­திக்­கொள்­ளு­தல்’, ‘இயற்­கையை மாற்­றி­ய­மைத்­தல்’ என்று மூன்று பிரி­வு­க­ளா­கக் கண்­காட்சி அமைக்­கப்­பட்­டுள்­ளது. தேசிய நூல­கக் கட்­ட­டத்­தின் பத்­தா­வது மாடி காட்­சிக்­கூ­டத்­தில் இந்த கண்­காட்சி நடை­பெற்று வரு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!