மரணத்தின் விளிம்பிலும் அஞ்ச மறுத்தவர்

பொது இடத்­தில் சீனர்­க­ளின் தலை­கள் பாலம் ஒன்­றின் மீது ந­டப்­பட்ட கழிகளில் தொங்­கிய நிலை­யில் இருக்­கும்.

1941ல் தெற்கு மலா­யா­வி­லுள்ள கோத்தா திங்கி பகு­திக்கு அரு­கி­லுள்ள ரப்­பர் மரத் தோட்­டப் பகுதி­யில் வசித்த ஒன்­பது வயது கம­லம் சுப்­பையா (வலது படம்) இந்­தக் கோரக் காட்­சியை நினை­வு­கூர்ந்­தார்.

“தொப்­பி­களை மாட்­டு­வது போல மனி­தத் தலை­களை மாட்­டி­ வைத்தி ருப்பார்கள். ரத்­த­மெல்­லாம் கீழே சிந்­திக்­கொண்­டி­ருக்­கும்,” என்று இப்­போது 90 வய­தா­கி­யுள்ள திரு­மதி கம­லம் கூறி­னார்.

தோல் வெண்­மை­யாக இருந்த தம் அண்­ண­னைப் பார்க்க சீன­ரைப் போல இருந்­த­தால் ஒரு­முறை ஜப்­பா­னி­யர்­கள் அவ­ரைப் பிடித்துச் சென்­ற­போது தமது தந்தை மன்­றா­டி­ய­தால் அவரை விட்­டு­வைத்­த­தாக திரு­மதி கம­லம் கூறி­னார்.

தமி­ழ­கத்­தின் வேலூ­ரில் பிறந்து ஒரு வய­தாக இருந்­த­போது தமது பெற்­றோ­ரு­டன் அண்­ணன் மற்­றும் அக்­கா­வு­ட­னும் மலா­யாவை அடைந்­தார்.

“ஜப்­பானிய வீரர்­கள் சீனர்­களைப் பிடித்­துக் கொன்­றதை நேரில் பல முறை பார்த்­துள்­ளேன். பிண­மாக நடித்து தப்­பிக்க முயன்­ற­வர்­க­ளை­யும் கண்­டு­பி­டித்­துக் கொல்­வார்­கள்,” என்று அவர் கூறி­னார்.

ஜப்­பா­னி­யர்­கள் சிங்கப்பூரை விட்டு வெளி­யேறி பிரிட்­டிஷ் ஆட்சி­யா­ளர்­கள் மீண்­டும் திரும்­பி­ய­போது 1955ஆம் ஆண்­டில் புதி­தா­கப் பிறந்த ஒரு மக­ளு­டன் அத்­தம்­ப­தி­யர் மலேசியாவின் கோத்தா திங்கியி லிருந்து சிங்­கப்­பூருக்கு வந்து, புக்­கிட் பாஞ்­சாங் வட்­டா­ரத்­தில் தங்­க­ளது புதிய வாழ்க்­கை­யைத் தொடங்­கி­னர்.

தற்­போது ஜூரோங்­கில் வசித்து­ வ­ரும் இத்­தம்­ப­தி­ய­ருக்கு ஆறு பிள்­ளை­கள், 11 பேரப் பிள்­ளை­கள், 2 கொள்­ளுப் பேரப்­பிள்­ளை­கள் உள்­ள­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!