ஜப்பானியர் ஆக்கிரமிப்பு ஏற்படுத்திய சுதந்திர வேட்கை

ஜப்பானியர் ஆக்கிரமிப்பு ஏற்படுத்திய சுதந்திர வேட்கை

3 mins read
5e8725f6-362b-4f95-8e80-e358d0c83763
தனது போராட்ட அனுபவங்களை நூல்களாக எழுதியிருக்கும் திரு வை.சுதர்மன், கவிதைகளும் எழுதுவார். இதுவரை இவர் 15 நூல்களை எழுதியுள்ளார். படம்: திமத்தி டேவிட் -

ஜப்­பா­னிய ஆட்­சிக் காலம் துயர்­மிகுந்­த­தாக இருந்­தா­லும், கால­னித்­துவ ஆட்சி முடி­வுக்­கு­வர இரண்­டாம் உல­கப் போர் ஒரு கார­ண­மாக இருந்­தது என்று கூறும் 94 வயது திரு வைர­வன் சுதர்­மன் அப்­போது பதின்­ம­வ­ய­துச் சிறு­வன்.

போர்­வி­மா­னங்­கள் பறக்­கும்­போது பதுங்­க­வேண்­டும் என்ற கட்­டளை இருந்­தா­லும், அவை வானில் பறப்­பதை மற்ற சிறு­வர்­களு­டன் ரசித்த பரு­வம்.

தமி­ழ­கத்­தின் சிவ­கங்கை மாவட்­டம், திரு­ம­ண­வ­யல் எனும் ஊரில் 1928ஆம் ஆண்டு பிறந்த திரு சுதர்மன், பத்து வய­தில் குடும்­பத்­தைப் பிரிந்து, தாய்­மாமா பெரு­மாள் மண்­டோ­ரு­டன் மலா­யா­வுக்­குக் கப்பல் ஏறி­னார். கோலா பில்லாவில் அரசாங்க வேலை­யி­லி­ருந்த மாமா­வுடன் குவாட்டர்சில் தங்கினார்.

காலை­யில் ஆங்கி­லப்பள்­ளி­யில் ஆங்­கி­ல­மும் மாலை­யில் கோலா பில்லா முரு­கன் கோயி­லில் தமி­ழும் படித்­தார். அச்­ச­ம­யத்­தில் தொழி­லா­ளர்­க­ளு­டன் வேலையும் பார்த்த தாகக் கூறிய அவர், "சிறு­வர்­களுக்கு அப்­போது நாள் சம்­ப­ளம் 35 காசு­­தான்," என்­றார்.

"ஆண்­க­ளுக்கு 50 காசு, பெண்­க­ளுக்கு 45 காசு. தமி­ழர் மிகுந்த சிர­மங்­களை அனு­ப­வித்த காலம் அது. அது போர் மேகம் திர­ளத் தொடங்­கி­யி­ருந்த காலம்," என்­றார் அவர்.

அப்­போது, குளு­வாங் ரயில் நிலை­யத்­தில் எதேச்­சை­யாக இந்­திய தேசிய ராணு­வத்­தின் (ஐஎன்ஏ) ஜோகூர் மாநி­லத் தலை­வ­ரான மாப்­பா­ணம் பிள்­ளை­யைச் சந்­தித்­தார். இலங்­கைத் தமி­ழ­ரான மாப்­ப­ணம் பிள்ளை, சுதர்­ம­னுக்கு வேலை கொடுத்­த­தோடு தமது வீட்­டிலே தங்க இட­மும் கொடுத்­தார். அவர் மீண்­டும் மாமா வீட்­டுக்­குப் போன சம­யத்­தில் போர் தொடங்­கி­யது.

சுற்றி வாழ்ந்த தமி­ழர்­கள் அனை­வ­ருமே இந்­திய தேசிய ராணு­வம் பற்றி பேசிக்­கொண்­டி­ருந்­த­தைக் கேட்ட திரு சுதர்­ம­னும் மாமா­வின் விருப்­பத்­துக்கு எதி­ராக அப்­ப­டை­யில் சேர முடி­வெ­டுத்­தார்.

"ஆனால், மாமா ஐஎன்ஏ ஆத­ர­வா­ளர். அவ­ருக்கு அங்கே நண்­பர்­களும் இருந்­த­னர். அத­னால் மாமா­வும் மற்­ற­வர்­களும் ஐப்­பானி­ய­ரின் கொடு­மை­க­ளுக்கு உள்­ளா­க­வில்லை. உண­வுக்கு அவ்­வ­ளவு சிர­மப்­ப­ட­வில்லை," என்­றார் அவர்.

தொடக்­கத்­தில் சிறார் பிரி­வான 'பால சேனா'வில் சேர்ந்த சுதர்­மன், 16 வய­தில் 'காந்தி கம்­பெனி' எனும் படை­யில் ஒரு சிறு பிரி­வில் தலை­மைப் பொறுப்­பேற்­றார்.

கிட்­டத்­தட்ட 39,000 பேருக்கு பயிற்சி அளித்­தி­ருந்­தா­லும் போரில் ஈடு­படும் வாய்ப்பு அவருக்குக் கிடைக்­க­வில்லை.

சிரம்­பா­னில் அமைந்­தி­ருந்த 'ராஜா' இந்­திய தேசிய ராணு­வத்­தின் பயிற்சி முக­மா­கில் இருந்­த­போது, 1944ல், சுபாஷ் சந்­தி­ர­போ­ஸைச் சந்­தித்­துப் பேசும் அரிய வாய்ப்பு அவ­ருக்­குக் கிடைத்­தது.

அங்கு ஹிந்­தி­தான் புழக்­க­மொழி­யாக இருந்­த­தா­க­வும் அச்­ச­ம­யத்­தில் ஹிந்தி கற்­றுக்­கொண்­ட­தை­யும் குறிப்­பிட்­டார் திரு சுதர்மன்.

"ஜப்­பா­னி­யர்­கள் சர­ண­டைந்து, சந்­தி­ர­போ­ஸும் விபத்­தில் உயிர் இழந்­த­தும் எங்­க­ளுக்கு என்ன செய்­வது என்று தெரி­ய­வில்லை," என்ற அவர் கம்­யூ­னிஸ்டு வீரர்­களு­டன் மலைக்­கா­டு­களில் போராளி­யா­கச் செய­லாற்­றி­யதை நினைவு­கூர்ந்­தார்.

"வாழ்­நா­ளில் சொல்­லொ­ணாப் பயங்­க­ரங்­க­ளைக் காடு­களில் பார்த்­தேன். மிக­வும் கொடூ­ர­மான அனு­ப­வங்­கள்," என்­றார் அவர்.

1957ல் மலாயா சுதந்­தி­ரம் அடைந்­த­தும் போராளி வாழ்க்­கையை விடுத்த திரு சுதர்­மன், 1959ல் சிங்­கப்­பூர் வந்­தார். பின்­னர் இங்­கேயே அவ­ரது வாழ்க்­கையை அமைத்­துக்­கொண்­டார்.

"ஜப்­பா­னி­யர்­கள் சர­ண­டைந்த பிறகு, மீண்­டும் பிரிட்­டிஷ் ஆட்­சியை ஏற்க மக்­கள் மறுத்­த­னர். சுதந்­தி­ரத்­தைப் பற்றி அதி­கம் எண்­ணத் தொடங்­கி­னர். எனவே ஜப்­பா­னி­யப் படை­யெ­டுப்பு முடி­வில் நல்­லதை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது என்றே நினைக்­கி­றேன்," என்­றார் திரு சுதர்­மன்.

பிரிட்­டிஷ் ஆட்­சிக்காலத்தில், தமி­ழக மக்­க­ளைக் காட்­டி­லும் அதி­கம் தவித்த மலா­யாத் தோட்டத் தமி­ழர்­க­ளின் நிலை தம்மை கால­னித்­துவ ஆட்­சியை மிக­வும் வெறுக்க வைத்­த­தாக எழுத்­தா­ள­ரும் கவி­ஞ­ரா­க­வும் உள்ள திரு சுதர்­மன் குறிப்பிட்டார்.

போர்க்காலத்தில் வாழ்ந்த நினைவுகளைக் கொண்டுள்ள சிங்கப்பூர்த் தமிழர்களைப் பற்றி மேலும் படிக்க, தொடர்புடைய கதைகளைக் காணவும்.