என் சகோதரியை ஜப்பானிய வீரர்கள் பிடிக்க வந்தனர்

தாயா­ரைப் போல தம்­மைப் பார்த்­துக் கொண்ட வளர்ப்­புச் சகோ­தரி தம் கண்­களுக்கு முன் ஜப்­பா­னி­யர்­க­ளால் கொண்டு செல்­லப்­படும் தறுவாயில் மிக­வும் உறைந்து போன­தாக நினை­வு­கூர்ந்­தார் திரு கிருஷ்ணா வீரப்­பன், 85 (இடது படம்).

“என் தாயார் ஒரு சீனப் பெண்­ணைத் தத்­தெ­டுத்­தார். நாங்­கள் தங்­கி­யி­ருந்த பகு­திக்கு அருகே சென்ற வீரர்­க­ளின் கண்­களில் என் சகோ­தரி தென்­பட்­டதை அடுத்து அவர்­கள் முன்­வந்து அவ­ரைத் தங்­க­ளு­டன் அழைத்­துச் செல்ல முயன்­ற­னர். நல்ல வேளை­யாக வீட்­டில் இருந்த என் அண்ணனால் அவ­ரைக் காப்­பாற்ற முடிந்­தது. கப்­பல்­து­றை­யில் பணி­பு­ரிந்த என் அண்­ணன் அப்­போது 20 வயது மதிக்­கத்­தக்­க­வர். ஜப்­பா­னிய மொழி­யைச் சர­ள­மா­கப் பேசத் தெரிந்த அவர், அந்த ஜப்­பா­னிய வீரர்­க­ளைத் திட்டி, மிரட்டி அந்த வளர்ப்பு அக்­கா­வைக் காப்­பாற்­றி­னார்.

நார்த் பிரிட்ஜ் ரோட்­டில் பிறந்து லிட்­டில் இந்­தியா வட்­டா­ரத்­தில் உள்ள சந்­தர் ரோட்­டில் வளர்ந்­த­தா­கத் திரு கிருஷ்ணா தெரி­வித்­தார். “தற்­போது ஸ்ரீ லட்சுமி நாரா­யண் ஆல­யம் இருக்­கும் இடத்­தில்­தான் என் வீடு இருந்­தது,” என்­றார் கப்­பல்­க­ளைப் பழு­து­பார்க்­கும் பணி­யில் ஈடு­பட்ட தந்தை வீரப்­பன், இல் லத்­த­ர­சி­யான தாயார், தமது உடன் பிறந்­த­வர்­கள் ஆகி­யோ­ரு­டன் வளர்ந்த திரு கிருஷ்ணா. பிறகு பஃப்ளோ ரோட்­டி­லுள்ள இரு­மாடி தரை வீட்­டுக்கு மாறி­னார். போர்க்­கா­லத்­தி­லும் அங்கு தொடர்ந்து தங்­கி­யி­ருந்­தார்.

அவ­ருக்கு எதிரே பழம்­பெ­ரும் வர்த்­த­கர் ஓ. ராம­சாமி நாடார் தங்­கி­யி­ருந்­தார். “நாடார் குடும்­பத்­து­டன் எங்­க­ளுக்கு நல்ல பழக்­கம் உள்­ளது. அக்­கா­ல­கட்­டத்­தில் சிங்­கப்­பூ­ரின் ஆகப் பெரிய பணக்­கா­ர­ரான திரு நாடா­ருக்கு அழ­கான எட்டு வீடு­கள் இருந்­தன.

“அழ­கிய இத்­தா­லிய பளிங்­குக் கற்­க­ளால் ஆன அந்த மாளி­கை­யில் நாடார் குடும்­பத்­தி­னர் தங்­கி­ய­போது அவர்­களைக் காண முக்­கிய பிர­மு­கர்­கள் வரு­வது வழக்­கம். ஜப்­பா­னி­யர்­கள் வந்த பிறகு அவர்­கள் நிர்­வாகி ஒரு­வ­ரி­டம் மாளி­கையை ஒப்­ப­டைத்­து­விட்டு இந்­தியா திரும்­பி­னர். அவர்­க­ளின் வீடு­களில் ஒன்று, ஐஎன்ஏ எனும் இந்­திய தேசிய ராணு­வப் படை­யின் மருத்­து­வ­மனை­யாகச் செயல்­பட்­டது,” என்­றார்.

போர்க்­கா­லத்­தின்­போது ஒரு மாது, அரு­கி­லுள்ள தமக்­கும் வேறு சில பிள்­ளை­க­ளுக்­கும் ஆங்­கி­லம், தமிழ், கணக்குப் பாடங்­களை மாதம் இரண்டு வெள்ளிக் கட்­ட­ணத்­தில் கற்­றுத்­தந்­த­தா­கக் கூறி­னார் திரு கிருஷ்ணா. ஜப்­பா­னி­யப் பள்­ளிக்­குச் சரி­யா­கச் செல்­லா­த­தற்­குக் கார­ணம், தொடர்ச்­சி­யாக விழும் போர்­வி­மான குண்­டு­கள். “அடிக்­கடி எச்­ச­ரிக்கை மணி ஒலிக்­கும். நான் படித்­த­ ஜப்­பா­னி­யப் பள்­ளி­யில் வகுப்பு அரை மணி நேரத்­திற்கு மேல் நீடிக்­காது. எனவே அங்கு செல்­வ­தை­யும் நிறுத்­தி­னேன்,” என்று அவர் கூறி­னார்.

ஸ்ரீ வீர­மா­கா­ளி­யம்­மன் கோயில் வளா­கத்­தில் உள்ள திட­லில் பயிற்சி மேற்­கொண்ட இந்­திய தேசிய ராணு­வப் படை­யி­ன­ரைப் பார்க்க அடிக்­க­டி சென்ற தாகத் திரு கிருஷ்ணா குறிப்­பிட்­டார். “எல்லா வய­தைச் சேர்ந்த வீரர்­கள் அணி வகுத்துச் செல்லும்­போது நானும் விளை­யாட்­டுக்­காக அவர்­களைப் போல் செய்­வேன்,” என்­றார். அந்­தப் படை­யைச் சேர்ந்த ஒரு சிலர் அவ­ரது வீட்­டில் தங்­கி­னர்.

“போர் நடப்­பு­க­ளைப் பற்றி அவர்­கள்­என்­னி­டம் பேசி­னர். இந்­தி­யா­வின் மீது மிக ஆழ­மான பற்­றைக் கொண்­டி­ருந்த அவர்­கள், இங்­குள்ள இந்­தி­யர்­க­ளின் நலன் பற்­றி­யும் மிகுந்த அக்­கறை கொண்­டி­ருந்­தார்­கள்,” என்று அவர் கூறி­னார். 1944 ஆம் ஆண்­டில் நேதாஜி சுபாஸ் சந்­தி­ர­போஸ் சிங்­கப்­பூ­ரில் கலந்து கொண்ட கூட்­டத்­தை­யும் திரு கிருஷ்ணா நினை­வு­கூர்ந்­தார்.

1945ஆம் ஆண்டு ஜப்­பா­னி­யர்­க­ளின் வெளி­யேற்­றத்­திற்­குப் பிறகு அர­சாங்­கப் பள்­ளி­களில் இவர் சேர இய­லா­த­தால், இறு­தி­யில் ராயல் இங்­கி­லிஷ் எனும் தனி­யார் பள்­ளி­யில் கூடு­தல் கட்­ட­ணத்­தில் சேர்க்­கப்­பட்­டார்.

“பத்து வய­தில் தொடக்­க­நிலை ஒன்­றைத் தொடங்க வேண்­டிய சூழல் என் காலத்­தில் வாழ்ந்த பல­ருக்கு ஏற்­பட்­டது,” என்று அவர் கூறி­னார். அந்­தத் தனி­யார் பள்­ளி­யில் ஈராண்டு பயின்ற பிறகு திரு கிருஷ்ணா, 1947ல் செயிண்ட் ஜோசப் கல்வி நிலை­யத்­தில் சேர்ந்­தார். அங்கு அவர் சிறப்­பா­கப் படித்து வந்­த­தால் அவ­ரது கட்­ட­ணம் குறைக்­கப்­பட்­டது. அதன் பிறகு ‘ஓ’ நிலைத் தேர்­வில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்று கோலா­லம்­பூர் தொழிற்­கல்­லூ­ரி­யில் சேர்ந்­தார்.

சிங்­கப்­பூ­ரின் சாலைக் கட்­ட­மைப்­பின் உரு­வாக்­கத்­தில் இன்­றி­ய­மை­யாத பங்கை ஆற்­றிய இவர், சிங்­கப்­பூ­ரின் பல்­வேறு சாலை­களை அமைத்து போக்­கு­வ­ரத்­துக் கட்­ட­மைப்பு மற்­றும் உள்­கட்­ட­மைப்பு வளர்ச்­சி­யில் தனக்­கென ஒரு முத்­தி­ரை­யைப் பதித்­துக்­கொண்­டார்.

லீ குவான் இயூ, கோ கெங் சுவீ, தேவன் நாயர் போன்ற முன்­னோ­டித் தலை­வர்­கள், ஊழ­லைத் துடைத்­தொழித்து முற்­போக்­கான நாடாக சிங்­கப்­பூரை மாற்­றி­ய­தற்­காக தாம் என்­றும் நன்­றி­யு­டன் இருப்­ப­தாக அவர் கூறி­னார்.

போர்க்காலத்தில் வாழ்ந்த நினைவுகளைக் கொண்டுள்ள சிங்கப்பூர்த் தமிழர்களைப் பற்றி மேலும் படிக்க, தொடர்புடைய கதைகளைக் காணவும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!