ஜப்பானியர் காலத்தில்...

 சிங்கப்பூரின் பெயர் ‘சியோனான் டோ’ என மாற்றப்பட்டது. 1942ல் ஜப்பானிய மொழி அனைத்துப் பள்ளிகளிலும் கட்டாயமாக்கப்பட்டது. 1943ஆம் ஆண்டுக்குள் அனைத்து மாணவர்களுக்கும் ஜப்பானிய மொழி கற்றுத்தரப்பட்டது.

 வாழைமரப் படம்போட்டு ஜப்பானியரின் ‘வாழைத்தார் நோட்டு’ புழக்கத்துக்கு வந்தது.

 ‘கெம்பத்தாய்’ என்ற ராணுவ போலிஸ் அமைப்பைப் பயன்படுத்தி சிங்கப்பூர், மலாயாவிலுள்ள சீன மக்களுக்கு கடும் தொல்லைகள் கொடுக்கப்பட்டன. 1930களில் சீனாவுக்கு எதிராக ஜப்பான் போர் தொடுத்தபோது மலாயா-சிங்கப்பூர் வாழ் சீனர்கள் நிதியாதரவு அளித்ததால் ஜப்பான் இவர்கள் மீது ஜப்பான் விரோதம் பூண்டது.

 சுத்தப்படுத்துதல் என பொருள் கொண்டுள்ள ‘சூக்சிங்’ திட்டத்தின்கீழ் சிங்கப்பூரில் 50,000 சீனர்கள் கொல்லப்பட வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டதாகவும், படையெடுப்பின் முடிவுக்குள் இந்த எண்ணிக்கையில் பாதி எட்டப்பட்டதாகவும் சில தகவல்கள் கூறுகின்றன. 5,000 பேர் கொல்லப்பட்டதாக அப்போதைய ஜப்பானியர்கள் தெரிவித்தனர்.

 உணவுப் பற்றாக்குறையால் ரேஷன் முறை பயன்பாட்டில் இருந்தது. அரிசி கிடைக்காததால் மக்கள் சீனிக்கிழங்கு, மரவள்ளிக் கிழங்குகளை வளர்த்து உண்டனர்.

 படையெடுப்புக்கு முந்திய காலகட்டத்தைக் காட்டிலும் பணவீக்கம், 12, 15 மடங்கு அதிகரித்தது.

 ஜப்பானியப் பேரரசரின் பிறந்தநாள் உள்ளிட்ட முக்கிய ஜப்பானிய விழாக்கள் சிங்கப்பூர் நாள்காட்டிகளில் இடம்பெற்றன.

 மலேரியா, பெரி பெரி போன்ற கிருமித்தொற்றுக்களாலும் மேலும் பலர் மடிந்தனர்.

 சிங்கப்பூரில் மட்டும் மேற்கத்திய கூட்டுப்படையைச் சேர்ந்த 50,000 வெள்ளைக்கார வீரர்கள் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டனர்.

போர்க்காலத்தில் வாழ்ந்த நினைவுகளைக் கொண்டுள்ள சிங்கப்பூர்த் தமிழர்களைப் பற்றி மேலும் படிக்க, தொடர்புடைய கதைகளைக் காணவும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!