துயர காலத்தில் நிலவிய ஒற்றுமை

ஜப்­பா­னிய படை­யெ­டுப்­பின்­போது ஆறு வயது சிறு­மி­யாக 85 வயது திரு­வாட்டி பஞ்­ச­வர்­ணம், போர்க்­கா­லத்­தில் சிர­மங்­கள் இருந்­தாலும், இனப்பாகு­பாடின்றி எல்­லா­ரும் ஒற்றுமையாக, ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ்ந்­தது தம்­மால் மறக்க முடியாதது என்­றார்.

“ஜப்­பா­னி­யர் ஆட்­சி­யின்­போது கடு­மை­யான உண­வுத் தட்­டுப்­பாடு ஏற்­பட்­டது. மர­வள்­ளிக் கிழங்­கும் சிறி­த­ளவு அரி­சி­யும்­தான் எங்­க­ளுக்­குக் கிடைக்­கும். எங்­க­ளுக்கு சிறிய நிலம் இருந்­தது. அங்கு விளைந்த நெல்­லை­யும் காய்­க­றி­க­ளை­யும் உண­வில்­லா­மல் தவித்த சீனர்­கள், மலாய்க்­கா­ரர்­கள் என்று எல்லாருக்கும் அப்பா இல­வ­ச­மாக கொடுத்­தார்,” என்று அவர் நினை­வு­கூர்ந்­தார்.

மலாக்­கா­வில் 1937ஆம் ஆண்டு பிறந்த திரு­வாட்டி பஞ்­ச­வர்­ணத்­தின் தந்தை சக்க­ர­வேலு வாடகை டாக்சி ஓட்­டு­ப­வர். ஓர் அண்­ணன், இரண்டு அக்­காமார்.

“சிறு­மி­யாக இருந்ததால் எனக்கு அச்ச உணர்வு ஏற்படவில்லை. சில நேரங்­களில் ஜப்­பா­னிய வீரர்­கள் எங்­கள் வீட்­டுக்கு வந்திருக்கிறார்கள். அவர்­கள் எங்­களை எது­வும் செய்­ய­வில்லை. ஆனால் என்­னைச் சுற்றி வாழ்ந்தவர்­களில் சிலர் போர்க்­காலத்­தின்­போது அதி­கம் கொள்ளை அடித்­த­தால் தண்­டிக்­கப்­பட்­ட­தா­கக் கேள்­விப்­பட்­டேன்,” என்று அவர் கூறி­னார்.

“ஜப்­பா­னி­யர்­கள், சீனர்­கள் சிலரை ஒரு சிறிய வீட்­டுக்­குள் அடைத்து, அந்த வீட்­டைத் தீயால் கொளுத்­தி­யதை என் அப்பா நேரில் பார்த்­துள்­ளார்,” என்ற திரு­வாட்டி பஞ்­ச­வர்­ணம்.

“பத்து ஆண்­டு­க­ளுக்கு முன் குடும்­பத்­து­டன் ஜப்­பா­னுக்கு சுற்­றுப்­ப­ய­ணம்­ போ­ன­போது அந்த மக்­க­ளின் கனி­வைக் கண்டு மிக­வும் நெகிழ்ந்­து­விட்­டேன். மிகவும் பண்­புள்­ள­வர்­க­ளாக இவர்­க­ளது சந்­த­தி­யி­ன­ரைக் காணும்­போது எனக்கு மகிழ்ச்­சி­யாக உள்­ளது,” என்­றார் அவர்.

சிங்­கப்­பூ­ரைச் சேர்ந்த பாவடை ஆறுமுகத்து­டன் செம்­ப­வாங் தமிழ்ச் சங்­கத்­தில், 1955ல் தமி­ழ­வேள் கோ சாரங்­க­பாணி முன்­னி­லை­யில் நடந்த சீர்­தி­ருத்த திரு­மணம் பற்றிப் பேசிய திரு­வாட்டி பஞ்­ச­வர்­ணம், அந்­தக் காலத்­தின் மகிழ்ச்­சி­யான நினை­வு­க­ளையே எண்­ணிப்­பார்க்க விரும்பு­வ­தா­கச் சொன்­னார்.

போர்க்காலத்தில் வாழ்ந்த நினைவுகளைக் கொண்டுள்ள சிங்கப்பூர்த் தமிழர்களைப் பற்றி மேலும் படிக்க, தொடர்புடைய கதைகளைக் காணவும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!