‘மதங்கள் யாவும் மனிதர்களை நன்னெறிப்படுத்தும் கருவிகள்’

கி. ஜனார்த்தனன்

தமிழ் இந்­துக் குடும்­பத்­தில் பிறந்­த­வர் யுவ­ராஜ் துரி­ய­தாசு. உட­லு­றுதி ஆர்­வ­ல­ரான இவர், டெப்ரா தயானி நான­ய­கர எனும் சிங்­கள பௌத்த குடும்­பத்­துப் பெண்ணை ஒன்­றரை ஆண்­டு­க­ளுக்கு முன்­னர் மண­முடித்­தார்.

இவர்­கள் இல்­ல­றத்­தின் பரி­சாய் மூன்று மாதங்­க­ளுக்கு முன் குடும்­பத்­தில் இணைந்த புது­வ­ரவு பெண் குழந்தை ரக்‌ஷ்யா.

திரு­ம­ண­மும் பிள்­ளைப்­பே­றும் கொவிட்-19 கட்­டுப்­பா­டு­க­ளுக்கு இடையே நடைபெற்றதால், முதன்­மு­தல் ரக்­‌ஷ்­யா­வு­டன் ஆல­யத்­துக்­குச் சென்று கொண்­டா­டும் இந்த விசாக தினம் இவர்­க­ளுக்கு மிக­வும் முக்­கி­யத்­து­வம் பெறு­கிறது.

செயின்ட் மைக்­கல்ஸ் ரோட்­டில் அமைந்துள்ள ஸ்ரீ லங்­க­ரா­மயா பௌத்த ஆல­யத்­திற்­குச் சென்று தலைமை பிக்கு கையால் மகள் ரக்­‌ஷ்­யா­விற்கு காப்­புக் கயிறு கட்டு­வது இவர்­கள் திட்­டம்.

கூட்டு வழி­பாடு, பின்­னர் பக்­தர்­கள் வீட்­டில் சமைத்­துக் கொண்­டு­வ­ரும் பல­கா­ரங்­க­ளைப் பகிர்ந்­து­கொள்­தல் போன்­ற­வற்றை மிக­வும் ஆர்­வத்­து­டன் எதிர்­பார்ப்­ப­தாக இவர்­கள் கூறி­னர்.

திரு­ம­ண­மும் புது­மனை புகு­வி­ழா­வும் இந்து, பௌத்த முறை­க­ளின்­படி நடந்­த­தால் தம்­பதி தங்­கள் வாழ்க்­கைத்­து­ணை­யின் சமய நடை­மு­றை­கள் குறித்து புரிந்­து­கொள்ள அது வழி­வ­குத்­தது. புதிய இல்­லத்தை ஆசீர்­வ­திக்க வந்த பௌத்த துற­வி­க­ளுக்கு மரி­யாதை செய்­தது புதிய அனு­ப­வம் என்று சொன்ன யுவ­ராஜ், பௌத்த நடை­மு­றை­கள் பொருள் பொதிந்­தவை என்­றும் பௌத்த சம­யக் கொண்­டாட்­டங்­களில் நிறைந்­தி­ருக்­கும் அமை­தி­யும் எளி­மை­யும் தனக்கு மிக­வும் பிடித்­தி­ருப்­ப­தா­க­வும் கூறி­னார்.

தொடர்­புத் துறை நிபு­ண­ரா­கப் பணி­யாற்­றும் திரு­மதி தயானி, சிங்­கப்­பூ­ரில் பிறந்து வளர்ந்­த­வர்.

தாயார் கத்­தோ­லிக்க சம­யத்­தைச் சேர்ந்த சீனர் என்­ற­போ­தும் தந்­தை­வழி தாத்தா, பாட்டி, உற­வினர்­கள் வழி­காட்­ட­லில் சிங்­கள மர­பு­டன் வளர்ந்­த­தாகக் கூறிய தயானி, இந்து சம­யத்­தைப் பற்­றித் தன் கண­வ­ரி­டம் மேலும் தெரிந்­து­கொண்­ட­தா­கக் குறிப்­பிட்­டார்.

மொழி­யா­லும் சம­யத்­தா­லும் வேறு­பட்­டா­லும் விட்­டுக்­கொ­டுத்­தலே இல்­ல­றத்­தின் அடி­நா­தம் என்­பது இந்­தத் தம்­ப­தி­யின் நம்­பிக்கை.

திரு­ம­ணத்­தின்­போது தனது ஆசை­கள் சில­வற்­றைக் கண­வன் குடும்­பத்­தி­ன­ரின் நம்­பிக்­கை­க­ளுக்­காக விட்­டுக்­கொ­டுத்­தார் தயானி.

முக்­கிய பௌத்த பண்­டிகை நாள்­களில் அன்பு மனை­விக்­காக சைவ உணவை மட்­டுமே உட்­கொள்­கி­றார் யுவ­ராஜ்.

சிங்­க­ளப் பண்­பாட்­டை­யும் மதித்து நடக்­கும் மாமி­யார் கஸ்­தூ­ரி­பாய் ராமு, தமிழ்த் திரைப்­ப­டங்­க­ளை­யும் பாடல்­க­ளை­யும் அறி­மு­கப்­ப­டுத்­தும் நாத்­த­னார் ஷாலினி, ரக்‌ஷ்யா வளர்ந்­த­தும் ஞாயிற்­றுக்­கி­ழமை களில் நடை­பெ­றும் சிங்­கள பௌத்­தர்­க­ளுக்­கான சமய வகுப்­பில் சேர மன­தார சம்­ம­திக்­கும் கண­வன் என அன்­பு­வா­ழும் கூடாக விளங்­கு­கிறது தனது வீடு என்­கி­றார் தயானி.

எல்லா சம­யங்­க­ளுமே மனி­தர்­களை நன்­னெ­றிப்­ப­டுத்­தும் கரு­வி­களே; அவற்­றின் உள்­ளர்த்­தத்­தைப் புரிந்து மதிக்­கக் கற்­றுக்­கொள்ள வேண்­டும் என்­று கூறினார் யுவ­ராஜ்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!